மார்ல்பரோ மாளிகை

மார்ல்பரோ மாளிகை (Marlborough House) இங்கிலாந்தில் இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஓர் மாளிகையாகும். இது பிரித்தானிய அரச குடும்பத்திற்கு வேண்டிய மார்ல்பரோ கோமகள் சாரா சர்ச்சிலுக்காக 1711இல் கட்டப்பட்டது. அவரது மரணத்திற்குப் பின்னர் அடுத்த மார்ல்பரோ கோமகன்களுக்கு சென்றது.

மார்ல்பரோ மாளிகை துவக்கத்தில் இரண்டு மாடிகளுடன் கட்டப்பட்டது. இந்த 1750ஆம் ஆண்டு கோட்டோவியம் வாயிலில் பூங்காவனம் உள்ளதைக் காட்டுகிறது.
மார்ல்பரோ மாளிகை – தெற்குப் புறம்
1850களில் பதிப்பிக்கப்பட்ட மாளிகையின் முன்தோற்றத்தில் இரு புறத்திலும் கூடுதல் மாடி கட்டப்பட்டுள்ளது. பின்னர் நான்காவது மாடியும் கட்டப்பட்டது. நடுப்பகுதியில் மூன்றாவது மாடி கட்டப்பட்டது.

1817இல், இது அரச சொத்தாயிற்று.[1] இதனை அரசக் குடும்பத்தவர் பயன்படுத்தி வந்தனர். அவர்களில் 1831 முதல் 1849இல் தமது மரணம் வரை பயன்படுத்திய அரசி அடிலெய்டு குறிப்பிடத்தக்கவராவார்.[2] அரச கலைக் கல்லூரிக்கு முன்னோடியாக அமைந்த "தேசிய கலைப் பயிற்சி பள்ளிக்கு" துவக்கமாக இம்மாளிகை இருந்தது. 1861இல் மார்ல்பரோ மாளிகை வேல்சு இளவரசரின் இலண்டன் இருப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. வேல்சு இளவரசராக இருந்த ஏழாம் எட்வர்டினால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு இது அவருடைய இலண்டன் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. 1901இல் அவர் அரியணை ஏறியபிறகும் அரண்மனையாக விளங்கிய மாளிகையை கடைசியாக அரசி மேரி 1953 வரை பயன்படுத்தினார். அவரது மறைவிற்குப் பிறகு அவரது பேத்தி அரசி எலிசபெத் II பொதுநலவாயத் தலைமைச் செயலகம் இயங்க இம்மாளிகையை அளித்தார். இன்றுவரை தலைமைச்செயலகமும் பொதுநலவாய நிறுவனமும் இங்கிருந்துதான் இயங்குகின்றன.

மேற்சான்றுகள் தொகு

  1. Nikolaus Pevsner, The Buildings of England: London vol. I, p 470f
  2. F. H. W. Sheppard (General Editor) (1960). "Pall Mall, South Side, Past Buildings: Nos 66–68 (consec.) Pall Mall: The Junior Naval and Military Club". Survey of London: volumes 29 and 30: St James Westminster, Part 1. Institute of Historical Research. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013. {{cite web}}: |author= has generic name (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ல்பரோ_மாளிகை&oldid=2080434" இலிருந்து மீள்விக்கப்பட்டது