பொன்சொரிமலை

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மலை

பொன்சொரிமலை (Ponsorimalai) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்பரப்பிபட்டியில் அமைந்துள்ளது. இது சொரி மலை என வழங்கப்படுகிறது.

சொரிமலை
அலவாய்மலையில் இருந்து வடமேற்கே பொன்சொரிமலை, அதற்கு அப்பால் கஞ்சமலை
உயர்ந்த புள்ளி
ஆள்கூறு11°32′48.9″N 78°06′19.6″E / 11.546917°N 78.105444°E / 11.546917; 78.105444
பரிமாணங்கள்
நீளம்2.575 km (1.600 mi) N–S
அகலம்2.253 km (1.400 mi) E–W
பரப்பளவு5.8 km2 (2.2 sq mi)
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புபொன்சொரிமலை
பெயரின் மொழிதமிழ்
புவியியல்
அமைவிடம்வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்
மூலத் தொடர்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
Biomeமலைக்காடு

நிலவியல்

தொகு

பொன்சொரிமலைக்கு[1] வடக்கு மற்றும் மேற்கே சேலம் மாவட்ட எல்லை புற கிராமங்களும், தெற்கு மற்றும் கிழக்கே நாமக்கல் மாவட்ட எல்லை புற கிராமங்களும் அமைந்துள்ளது. அலவாய்மலை[2] இம் மலைக்கு தென்கிழக்கே அமைந்துள்ளது. கஞ்சமலை[3] இம் மலைக்கு வடமேற்கே அமைந்துள்ளது.

 
பொன்பரப்பிபட்டி அருகே பொன்சொரி மாலை.

வரலாறு

தொகு

இம் மலையில் சமண சமய துறவிகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அதற்கான கல்வெட்டுகள் இங்கு கானப்படுகிறது. அவற்றில்

“தன்னூன்
பெருக்கற்
குத் தான்பி
றிதூனுண்பா
னெங்ஙன
மாளுமருள்”

என்ற திருக்குறளின் புலால் மறுத்தல் அதிகாரக் குறள் (குறள் 251) பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொங்கு நாட்டு மக்கள் அஹிம்சையையும் கொல்லாமையையும் போற்றினர் என்பது தெரியவந்துள்ளது.[4]

மேற்கோள்

தொகு
  1. "பொன்சொரிமலை" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "அலவாய்மலை".
  3. "கஞ்சமலை". Archived from the original on 2013-12-07. பார்க்கப்பட்ட நாள் 2018-04-24.
  4. பொழிலன்; கி. குணத்தொகை; லெனா குமார்; தகடூர் சம்பத்; முத்தமிழ்; கோ. பிச்சை வள்ளிநாயகம்; தே. அன்புநிதி; க. வெ. நெடுஞ்சேரலாதன், eds. (2019). திருவள்ளுவர் 2050: ஆண்டுகள், அடைவுகள் (1 ed.). சென்னை: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு. p. 774–779, 783.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்சொரிமலை&oldid=3565669" இலிருந்து மீள்விக்கப்பட்டது