வை. பொன்னம்பலனார்

(பொன்னம்பலனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் (30 சனவரி 1904 - 2 திசம்பர் 1972) ஆசிரியப் பணி வழியே தமிழுக்குத் தொண்டு செய்தவர்.

தொடக்க வாழ்க்கை

தொகு

இன்றைய அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள கீழமாளிகை என்னும் சிற்றூரில் பர்வதம்மாள்-வைத்தியலிங்கம் இணையருக்கு மகனாக 30 சனவரி 1904 அன்று பிறந்தார் பொன்னம்பலனார். இவருடன் பிறந்தவர்கள் நால்வர். தனித்தமிழ்ப் பற்றால் இவாின் இயற்பெயர் கனகசபை என்பதை "பொன்னம்பலம்" என மாற்றிக்கொண்டார்.

கல்வி

தொகு

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் டொடக்கக் கல்வி பயின்றபின் திருவையாறு அரசர் கல்லூரியில் பயி்ன்றார். 1931-ல் புலவர் பட்டம் பெற்றார். தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளின் மகன் திருநாவுக்கரசரின் நட்பால் மறைமலையாரின் தொடர்பு ஏற்பட்டது.

ஆசிாியப்பணி

தொகு

புலவர் பட்டம் பெற்ற பொன்னம்பலனார் 1932-ல் சேலம் மாவட்டம் வேலூரில் உள்ள கந்தசாமி கண்டார் அறக்கட்டளையைச் சார்ந்த உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிாியராகச் சேர்ந்தார். அப்பள்ளியில் 1947 வரை தமிழாசிாியராகப் பணியாற்றினார்.

சேலம் நகராண்மை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிாியராகப் பணியாற்றி போதுதான் "தமிழ்த்தேசியத்தந்தை" பெருஞ்சித்திரனார் இவரின் மாணவராக இருந்தார். பாவாணரின் தொடர்பும், பாரதிதாசனின் தொடர்பும் இவருக்கு ஏற்பட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது அப்பணியில் அமர்த்தப்பட்ட இவர், பொதுமக்களின் வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தமையால் ஆசிரியப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுப் பின் மீண்டும் அமர்த்தப்பட்டார்.[1]

1951-ல் திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி மாவட்ட மன்ற உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிாியராகப் பணியேற்றார். 1954 செந்துறை உயர்நிலைப்பள்ளியிலும், 1957-ல் இருந்து 1960 வரை அரவக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். பின்னர் பொன்பரப்பி உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு இறுதியாக 1968-ல் தோகைமலை பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தமிழ் மறவர் பட்டம்

தொகு

1957-இல் பொன்னம்பலனாாின் துணிவைப்பாராட்டி தந்தை பொியாரின் கரங்களால் தமிழ் மறவர் என்னும் பட்டத்தை வழங்க ஆவண செய்தது. இவ்விழாவில் பாவாணரும், பாவேந்தரும் முன்னிலை வகித்தனர். அன்றிலிருந்து தமிழ் மறவர் என்றால் பொன்னம்பலனாரைக் குறிக்கும் பட்டமாக அமைந்தது.

இறப்பு

தொகு

பொன்னம்பலனார் 1972-ல் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் மருத்துவம் பலனளிக்காமல் 2 திசம்பர் 1972 அன்று தன் 69-ஆம் அகவையில் காலமானார்.

வழிமரபினர்

தொகு

இவருக்கு கொற்றி, பகுத்தறிவு (பி. 1944) ஆகிய மகள்கள் பிறந்தனர்.

கொற்றி, சிவப்பிரகாசம் என்பாரைத் திருமணம் செய்தார்.[2]

சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய பகுத்தறிவு, தமிழ்ப்பேராசிரியரான சாமி பிச்சைப்பிள்ளை (எ) அறவாணனைத் திருமணம் செய்தார். இறுதியாக 28 சூன் 2015 அன்று சென்னையில் காலமானார். இவ்விணையரின் மகன் அன்புநெடுமாறன், ஒன்றிணைந்த அரசகத்தின் (பிரித்தானியம்) தலைநகர் இலண்டனில் வாழ்கிறார்.[3]

சான்று

தொகு
  • ஆய்வுக் கோவை 2005
  1. #340 ஆவன செய்வாரை ஆவணம் செய்வோம் 3.3 முனைவர் கி.குணத்தொகை தம்மைக் குறித்துத் தம் சொற்களில் #தென்மொழி, பார்க்கப்பட்ட நாள் 2023-04-05
  2. ஆளுநரை எதிர்த்து மக்கள் வழக்கு தொடரமுடியாது | Thozhar Valasa Vallavan Latest Speech | Book Speech, பார்க்கப்பட்ட நாள் 2023-04-10
  3. "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan". muelangovan.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வை._பொன்னம்பலனார்&oldid=3696445" இலிருந்து மீள்விக்கப்பட்டது