பொன்னிறத்தாள் அம்மன்
பொன்னிறத்தாள் அம்மன் என்பவர் நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். இவர் பொன்னிறம் போன்ற வண்ணமுடையவராக இருந்தமையால் பொன்னிறத்தாள் என அழைக்கப்படுகிறார். இவர் கற்பிணியாக இருக்கும்போது கள்ளர்களால் இசக்கி தெய்வத்திற்கு பலி கொடுக்கப்பட்டு தெய்வமானார்.[1]
பொன்னிறத்தாளின் கதை குமரி மாவட்டங்களில் வாய்மொழி வில்லுப்பாடலாகப் பாடப்பட்டது. சூல்பெண் பலி எனும் கொடூரமான நரபலி சடங்கு முறை தமிழகத்தில் இருந்துள்ளமைக்கான சான்றாக இக்கதை உள்ளது.
தொன்மம்
தொகுகள்ளர்கள் தங்களுடைய களவுக்காக சூல் முப்பலி இடும் சடங்கை செய்வார்கள். அதில் சூல் (கருவுற்ற) ஆடு, சூல் பன்றி மற்றும் சூல் பெண் ஆகியோர் அடங்குவர். இவ்வாறு முப்பலியின் போது பலிகொடுக்கபட்ட கருவுற்ற பெண் பொன்னிறத்தாள். பலி கொடுக்கப்பட்ட பிறகு சிவபெருமானிடம் சென்று பல வரங்களைப் பெற்றாள். அதனால் பொன்னிறத்தாள் அம்மன் என அழைக்கப்படுகிறார். [2]
கதைப்பாடல்
தொகுநாட்டார் கதைப்பாடல்ககளை ஆய்வு செய்து ஆவணம் செய்த நா. வானமாமலை இவருடைய கதையை பொன்னிறத்தாள் அம்மன் கதை என பதிவு செய்துள்ளார். [2] குமரி மாவட்ட வாய்மொழி வில்லுப்பாட்டுகளில் ஒன்றான பொன்னிறத்தாள் அம்மன் கதையை அ.கா. பெருமாள் பதிப்பித்துள்ளார். [3]
கோவில்கள்
தொகு- பொன்னிறத்தாள் அம்மன் கோயில், கடையம், திருநெல்வேலி மாவட்டம்.
ஆதாரங்கள்
தொகு- ↑ http://www.jeyamohan.in/9361#.V3fLI8tX7qA நாட்டாறியல் ஒரு கடிதம்
- ↑ 2.0 2.1 மக்கள்தெய்வங்களின் கதைகள் 2 - அ கா பெருமாள்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ அ.கா.பெருமாள் நாட்டார்கதை ஆய்வாளர் - ஆர்.ஜெய்குமார் - தமிழ் இந்து 20 மே, 18