நாட்டுப்புறத் தெய்வங்கள்

(நாட்டார் தெய்வங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பவை நாட்டுப்புற மக்களான கிராம மக்கள் வழிபடுகின்ற தெய்வங்களாகும்.[1] இந்த தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள் என்றும், சிறு தெய்வங்கள் என்றும் கூறுகின்றனர். இந்த நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாடு பெருந்தெய்வங்களின் வழிபாடுகளைப் போல் அல்லாமல் மாறுபட்டுள்ளது. இதனை சிறுதெய்வ வழிபாடு என்கின்றனர்.

நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் தெலுங்கு, தமிழ் மொழி பேசுகின்றவர்களால் வழிபடப்படுகின்றன.

வகைப்பாடுதொகு

நாட்டுப்புறத் தெய்வங்களை ஊர்த்தெய்வம், குலத்தெய்வம், இனத்தெய்வம், மாலைத்தெய்வம், சமாதி தெய்வம் என ஐந்து வகையாக துளசி இராமசாமியும், விருப்பதெய்வம், குலதெய்வம், கிராமதெய்வம், ஊர் தெய்வம் என ஐந்து வகையாக மிஷல் மொஃபத்தும் வகைப்படுத்தியுள்ளனர்.

நாட்டுப்புறத் தெய்வங்களை ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், கல்கள் என ரைட் ரெவரேண்ட் கென்றி வகைப்படுத்தியுள்ளார்.

தெய்வங்களின் தோற்றம்தொகு

 
ஆறு. இராமநாதனின் நாட்டுப்புறத் தெய்வங்கள் தோன்றிய விதத்தினைக் குறிப்பிடும் படம்

மனிதர்களின் அகால மரணத்திலிருந்து தோன்றுதல், வேள்விகளிலிருந்து தோன்றுதல், சிவபெருமான்- சக்தி உறவாலும், தேவர்கள் - அரக்கர்கள் தொடர்பாலும் தோன்றுதல் என மூன்று வகையான முறைகளில் நாட்டார் தெய்வங்கள் தோன்றுகின்றன. இவற்றில் மனிதர்களின் அகால மரணத்தில் தோன்றும் நாட்டுப்புறத் தெய்வங்கள், தற்கொலையிலிருந்து தோன்றுதல், கொலையிலிருந்து தோன்றுதல் என இரு வழிகளிலும், வேள்விகளிலிருந்து தோன்றும் நாட்டுப்புறத் தெய்வங்கள் சிவபெருமான் ஆணைப்படியும், மனிதர்கள் நடத்தும் வேள்வியிலிருந்தும் என இரு முறைகளில் உருவாகின்றார்கள். பிறவழிகளான உடலுறவிலிருந்து தோன்றுதல் சிவபெருமான் - சக்தி தம்பதிகளின் மூலமாகவோ, தேவர்- அசுரர்- முனிவர்களின் உடலுறவாலும் தோன்றுகின்றன.

நூல்கள்தொகு

இவற்றையும் காண்கதொகு

சிறுதெய்வ வழிபாடு

ஆதாரங்கள்தொகு

  1. "2".
  2. "Noolulagam » நாட்டுப்புறத் தெய்வங்கள் களஞ்சியம் – பேரா.சு.சண்முகசுந்தரம்". மூல முகவரியிலிருந்து 2017-11-15 அன்று பரணிடப்பட்டது.