பொன்முடி அணைக்கட்டு

கேரள அணை

இந்தியாவின் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பொன்முடி அணை, (Ponmudi Dam) கேரளாவின் மிக நீளமான ஆறாக விளங்கும் பெரியார் ஆற்றின் துணை ஆறான பன்னியார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு நீர்மின் திட்டமாகும். 1963ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இதன் நீளம் 294 மீட்டர் (965 அடி) ஆகும். அணையின் நீர்மின் கூறு 17 மெகாவாட் உறுதியான சக்தியுடன் 30 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்டது. ஆண்டுதோறும் 158 ஜிகாவாட் உற்பத்தி செய்கிறது.[1]

பொன்முடி அணை
அமைவிடம்இடுக்கி மாவட்டம், கேரளா, இந்தியா
புவியியல் ஆள்கூற்று9°57′1″N 77°3′37″E / 9.95028°N 77.06028°E / 9.95028; 77.06028

இருப்பிடம்

தொகு

இந்த அணையானது கேரளாவில் பெரியார் ஆற்று பள்ளத்தாக்கில் மூணாறு அருகே உள்ள பன்னியார் ஆற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தாத்ரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலத்தின் ஒரு பகுதியில் உள்ளதாகும். இந்த அணையின் அருகிலுள்ள நகரம் உடும்பன்சோலை ஆகும்.[1][2] மாட்டுப்பெட்டியிலிருந்து பொன்முடி அணைக்கு உள்ள தொலைவு 39 கிலோமீட்டர்கள் (24 மைல்கள்) ஆகும். [3]

சிறப்பம்சங்கள்

தொகு

பொன்முடி அணை 59 மீட்டர் (194 அடி) உயரமுள்ள கல்கட்டு ஈர்ப்பு அணையாகும். இதன் மொத்த நீளம் 294 மீட்டர்கள் (965 அடிகள்) ஆகும். முழு நீர்த்தேக்க மட்டத்தில், நீர்த்தேக்கத்தின் மொத்த சேமிப்பு திறன் 51,540,000 கன மீட்டர்கள் (1.820 X 109 சதுர அடிகள்) ஆகும். இந்த அணைக்கட்டின் உண்மையான கொள்ளளவு 47,400,000 கன மீட்டர்கள் (1.67 X 109 சதுர அடிகள்) ஆகும். அணையின் மொத்த அளவு 1,81,000 கன மீட்டர்கள் (6,400,000 கன அடிகள்) ஆகும். இந்த அணையானது நில அதிர்வு மண்டலம் -3 இல் அமைந்துள்ளது. நீர்த்தேக்க நீர் பரவல் பகுதி அல்லது நீரில் மூழ்கும் பகுதி 2.79 சதுர மீட்டர்கள் (30.0 சதுர அடிகள்) ஆகும். இந்த அணையின் வெள்ளக்கால் திறப்பின் அமைப்பானது வினாடிக்கு 1,416.03 கன மீட்டர்கள் (50,007 அடிகள்) வெளியேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 10/9728 X 6.4008 மீட்டர்கள் (36.000 அடி X 21.000 அடி) ஆரச்சீருள்ள கதவுகளால் வெள்ள வழியேற்றத்திற்கான மடைகள் பொருத்தப்பட்டுள்ளன. [1] [4] [5] சேமிக்கப்பட்ட நீரானது 3,066 மீட்டர்கள் (10,059 அடிகள்) அளவுள்ள சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டு, 220 மீட்டர்கள்(720 அடிகள்) அளவுள்ள சுழலியைச் சுழற்றும் மின் உற்பத்தி செய்யப்படுவதற்காக அனுப்பப்படுகிறது.

நீர் சக்தி மேம்பாடு

தொகு

நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படும் நீரின் ஓட்டமானது, 3,066 மீட்டர் (10,059 அடி) அளவுள்ள சுரங்கப்பாதை மற்றும் அதைத் தொடர்ந்த 1.7 மீ (5 அடி 7 அங்குலம்) விட்டம் மற்றும் 762 மீ (2500 அடி) நீளம் கொண்ட இரண்டு பென்ஸ்டாக் குழாய்கள் வழியாக திருப்பப்படுவதன் மூலம் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இரண்டு பென்ஸ்டாக் குழாய் வரிசைகள் வினாடிக்கு 17.88 கன மீட்டர் (631 கன அடி) நீர் வெளியேற்றத்தை கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளன. பன்னியாரில் அமைந்துள்ள மின் நிலையத்தில் 15 மெகாவாட் திறன் கொண்ட பிரான்சிஸ் விசையாழிகள் ஒவ்வொன்றும் இரண்டு அலகுகளைக் கொண்டு 30 மெகாவாட் திறனுடன் நிறுவப்பட்டுள்ளது. உறுதியான மின் உற்பத்தி 17 மெகாவாட் மற்றும் ஆண்டு உற்பத்தி 158 ஜிகாவாட் ஆகும். முதல் பிரிவு 29 டிசம்பர் 1963 இல் இயக்கப்பட்டது, இரண்டாவது அலகு 26 ஜனவரி 1964 இல் இயக்கப்பட்டது. இந்த அலகுகள் 2001 மற்றும் 2003 இல் புதுப்பிக்கப்பட்டன. [4] [6]

பெரிய பேரழிவு

தொகு

17 செப்டம்பர் 2007 அன்று இந்த திட்ட இடத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய பேரழிவில், பென்ஸ்டாக் அடைப்பிதழ் ஒன்று வெடித்து 7 பேர் இறந்தனர். 15 வீடுகள் அழிக்கப்பட்டன. 150 ஏக்கர்கள் அளவிலான பயிர்கள் சேதமடைந்தன. குழாய் வெடிப்பிற்கு காரணம் ஃபிளேன்ஜ் போல்ட் இணைப்பை தளர்த்தியதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த அடைப்பிதழ் சூலை 2009-ல் சரி செய்யப்பட்டது. [4][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Ponmudi (Eb) D03300". Government of India.
  2. "Geography". National Information Centre. Archived from the original on 2017-06-24. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.
  3. "Mattupetty to Ponmudi Dam". Distancemonk.com.
  4. 4.0 4.1 4.2 "Indentifiers for Hydro: Panniyar Hydroelectric Power Plant India". Government of Kerala. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.
  5. "Table 1.1 Important Reservoirs on the Periyar and Chakkodi River basins" (pdf). Shodhganga Inflibnet Centre.
  6. "Panniyar Power House PH01241". Government of India.
  7. "Major Accidents In India Due To Negligence In Dam Safety / 1979 – 2014" (PDF). NAPM – National Alliance of People's Movements. Archived from the original (pdf) on 2015-05-24. பார்க்கப்பட்ட நாள் 2020-01-04.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்முடி_அணைக்கட்டு&oldid=3781229" இலிருந்து மீள்விக்கப்பட்டது