பொறளை
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
(பொரல்லை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொறளை (Borella) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 08 ஆகும்.[1][2][3]
பொறளை
බොරැල්ල Borella | |
---|---|
நகர்ப்புறம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்) |
மக்களியல்
தொகுபொறளை பலதரப்பட்ட இனத்தவரும் மதத்தவரும் வாழுமிடமாக உள்ளது. இங்குள்ள முதன்மை இனத்தவராக சிங்களவரும் தமிழரும் உள்ளனர். சிறுபான்மையராக பரங்கியர்கள், இலங்கைச் சோனகர் மற்றும் பிறர் உள்ளனர்.
விளையாட்டுத் திடல்கள்
தொகு- பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் - பி.சாரா ஓவல் என்றும் தமிழ் யூனியன் துடுப்பாட்ட மற்றும் தடகள கழகம் என்றும் பரவலாக அறியப்படுகிறது.
- ரோயல் கொழும்பு குழிப்பந்தாட்டக் கழகம் (ரிட்ஜ்வே லிங்க்ஸ் எனவும் அறியப்படுகிறது). 1879இல் நிறுவப்பட்ட இதுவே நாட்டின் மிகத்தொன்மையான குழிப்பந்தாட்ட மைதானமாகும்.
- அப்துல் ரகுமான் விளையாட்டுக் கழகம்
பள்ளிகள்
தொகு- உவெசுலி கல்லூரி
- பண்டாரநாயக்க வித்தியாலயம்
- கேரி கல்லூரி
- தேவி பாலிகா வித்தியாலயம்
- சி. டபுள்யூ. டபுள்யூ. கன்னங்கரா வித்தியாலயம்
- சுசாமியா வர்தனா மகா வித்தியாலயம்
- இரத்னாவளி பாலிகா மகா வித்தியாலயம்
- டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி
இடுகாடு
தொகுஇங்குள்ள பொறளை கனத்தை இடுகாடு அனைத்து சமயத்தினருக்குமான கொழும்பின் முதன்மை இடுகாடாகும். இது 1840 இல் நிறுவப்பட்டது. இரண்டு உலகப் போர்களிலும் வீரமரணம் அடைந்தவர்களுக்கு தனியான இடம் உள்ளது. இங்கு எரியூட்டுவதற்கும் வசதிகள் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Borella Post Office - Sri Lanka Postal Codes - Mohanjith". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-15.
- ↑ http://dl.lib.mrt.ac.lk/bitstream/handle/123/9841/chapter%201.pdf?sequence=4&isAllowed=y [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "COLOMBO TRAMWAYS - DOWN MEMORY LANE | History of Ceylon".