பொரிவிளங்காய் உருண்டை

பொரிவிளாங்காய் உருண்டை தமிழர்கள் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளில் ஒன்று. இது இனிப்பும், உறைப்பும் கலந்த உருண்டை வடிவான பலகாரம். பல நாட்களுக்குப் பழுதடையாது இருக்கக் கூடியது. இதில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளதால், குழந்தைகள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. [1]

சொல்லிலக்கணம் தொகு

பொருள் விளங்கா உருண்டை என்பதன் மருவி பொரிவிளாங்காய் உருண்டை என அழைக்கப்படுகிறது. கெட்டியாக இருப்பதால் ‘கெட்டி உருண்டை’ என்றும் கூறுவார்கள்.

பொரிவிளாங்காய் செய்வதற்குத் தேவையான பொருட்கள் தொகு

  • பொரித்த அரிசி மா (புழுங்கல் அரிசியைப் பொரித்து அரைத்த மா) - 2 சுண்டு
  • உளுத்தம்மா - 1 சுண்டு
  • சீனி - 3 சுண்டு
  • சின்னச்சீரகம் - 3தேக்கரண்டி
  • மிளகு - 3தேக்கரண்டி
  • செத்தல் மிளகாய் - 10-20

செய்யும் முறை தொகு

  • சின்னச்சீரகம், மிளகு, செத்தல், மூன்றையும் நன்றாக (தண்ணீர் விடாமல்) அரைத்தெடுக்க வேண்டும்.
  • பொரித்த அரிசிமா, உளுத்தம்மா, அரைத்த கலவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.
  • சீனியைப் பாணியாகக் காய்ச்ச வேண்டும்.
  • காய்ச்சிய சீனிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக மாக்கலவையில் ஊற்றி, லட்டுப் போல விளாங்காயின் அளவில் உருட்டி, உருட்டிப் பிடிக்க வேண்டும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. மலர், மாலை (11 ஆக., 2021). "புரோட்டீன் நிறைந்த பொரி விளங்காய் உருண்டை". Maalaimalar. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரிவிளங்காய்_உருண்டை&oldid=3704936" இலிருந்து மீள்விக்கப்பட்டது