திண்மநிலை விசையியல்
(பொருண்ம விசையியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திண்மநிலை விசையியல் (Solid mechanics) திண்மங்களுக்கு கொடுக்கப்படும் விசைகள், வெப்பநிலை மாற்றங்கள், நிலை மாற்றங்கள், மற்றும் பிற வெளி அல்லது உட்புற முகமைகளால் திண்மங்களின் நடத்தையை, குறிப்பாக அவற்றின் இயக்கம் மற்றும் உருமாற்றம் குறித்த தொடர்ம விசையியலின் பிரிவாகும்.
திண்மநிலை விசையியல் குடிசார் மற்றும் இயந்திரவியல் பொறியியல் துறைகளுக்கும் நிலவியலுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.பொருளறிவியல் போன்ற இயற்பியல் துறைகளிலும் வெகுவாகப் பயன்படுத்தபடுகிறது. உயிரியலில் உடற்கூற்றியல் புரிதல்களுக்கும் செயற்கை பல்பொருத்துதலிலும் அறுவை பதித்தல்களிலும் பயனாகிறது. மற்றுமொரு நடைமுறைப் பயன்பாடாக ஆய்லர்-பெர்னூலி உத்தர சமன்பாடு உள்ளது. தகைவுகளையும் நலிவுகளையும் அவற்றிற்கிடையேயான தொடர்புகளையும் திண்மநிலை விசையியல் பல்திசையன்களைக் கொண்டு விவரிக்கிறது.
தொடர்ம விசையியலுடனான தொடர்பு
தொகுதொடர்ம விசையியல் தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி |
திண்மநிலை விசையியல் ஓய்வுநிலை வரையறுக்கப்பட்ட தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி |
மீட்சிப்பண்பு அளிக்கப்பட்ட தகவை நீக்கியபிறகு தங்கள் ஓய்வு வடிவத்திற்கு மீளும் பொருட்களை விவரிக்கிறது. | |
நெகிழ்வு தன்மை தேவையான அளவில் தகைவு அளிக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக வடிவு மாறும் பொருட்களை விவரிக்கிறது. |
உருமாற்றவியல் திண்ம மற்றும் பாய்ம இருநிலைப் பண்புகளை காட்டும் பொருட்களின் கல்வி. | ||
பாய்ம விசையியல் விசையால் உருமாறுகின்ற தொடர்ந்துள்ள பொருட்களைக் குறித்த இயற்பியல் கல்வி |
நியூட்டானியப் பாய்வற்ற பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டிராதவை | ||
நியூட்டானியப் பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டுள்ளவை. |