பொருளாதாரப் புலனாய்வுக் குழு
பொருளாதாரப் புலனாய்வுக் குழு (Economic Intelligence Council) இந்தியப் பொருளாதாரப் புலனாய்வு அமைப்புகளின் தலைமையான அமைப்பாகும். இக்குழு இந்தியா முழுவதும் 30 மண்டலப் புலனாய்வுக் குழுக்களைக் கொண்டுள்ளது. இக்குழு இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.[1] It was formed in 1990.[2]
பணிகள்
தொகுஇந்தியாவில் உளவு, கடத்தல், பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் பொருளாதார குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பான அரசு புலனாய்வு அமைப்புகள் மற்றும் விசாரணை அமைப்புகளை ஒருங்கிணைத்தல், மூலோபாயம் மற்றும் தகவல் பகிர்வுக்கு பொருளாதாரப் புலனாய்வுக் குழு பொறுப்பாகும்.[1] இந்தியாவின் நிதியமைச்சர் மற்றும் இந்திய அமைச்சரவைக் குழ நிதித் துறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் மற்றும் பொருளாதாரக் குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறது. [1]
குழுவின் உறுப்பினர்கள்
தொகுபொருளாதாரப் புலனாய்வுக் குழுவின் தலைவராக நிதி அமைச்சர் செயல்படுகிறார்.[1]மத்திய பொருளாதார புலனாய்வு பணியகத்தின் துணை இயக்குநர் இக்குழுவின் செயலாராக செயல்படுபார்.[2][3] இக்குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
- ஆளுநர், இந்திய ரிசர்வ் வங்கி
- தலைவர், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
- இயக்குநர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
- இயக்குநர், நடுவண் புலனாய்வுச் செயலகம்
- இயக்குநர், தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
- செயலாளர், வருவாய்த் துறை, நிதி அமைச்சகம்
- செயலாளர், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்
- கூடுதல் செயலாளர், வங்கித் துறை
- தலைவர், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
- தலைவர், மத்திய நேரடி வரிகள் வாரியம்
- இயக்குநர், அமலாக்க இயக்குனரகம்
இக்குழுவின் கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய உளவுத்துறையின் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிகஙகளுக்கான தலைமை இயக்குநர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Economic Intelligence Council". National Informatics Centre. Archived from the original on 12 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-07-18.
- ↑ 2.0 2.1 Central Economic Intelligence Bureau – Ministry of Finance. Ministry of Finance. http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/budget/annual_report/9596rev5.PDF. பார்த்த நாள்: 2009-07-18.
- ↑ "Central Economic Intelligence Bureau". National Informatics Centre. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2009-07-18.