பொற்றாமரைக்குளம்
பொற்றாமரைக்குளம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது. தொன்மையான (பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய) பழம்பெரும் நகரம் மதுரை. இக்குளம் செவ்வக வடிவில்,[1] 165 அடி (50 மீட்டர்) x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக்குளம் என்ற சொல், பொன் + தாமரை + குளம் எனப் பொருள் தரும். இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களுமுண்டு[2]. இந்த பொற்றாமரைக் குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன[3].
பொற்றாமரைக்குளம் | |
---|---|
அமைவிடம் | மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தமிழ்நாடு - 625001 |
ஆள்கூறுகள் | 9°55′08″N 78°07′11″E / 9.9189°N 78.1196°E |
வகை | குளம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 165 அடி |
அதிகபட்ச அகலம் | 120 அடி |
நீர்க் கனவளவு | 16 இலட்சம் லிட்டர் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 185 மீட்டர் |
குடியேற்றங்கள் | மதுரை |
கும்பகோணம்
தொகுதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரின் நடுவில் பொற்றாமரைக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meenakshi Sundareshwara Temple". பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
- ↑ "Pottramarai Kulam (the Golden Lotus Pond)". Archived from the original on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.
- ↑ "நாரைக்கு முக்தி கொடுத்த நான்மாடக்கூடல் நாயகன்". Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2012-06-22.