பொலினிக் அமிலம்

ஃபொலினிக் அமிலம் (Folinic acid) அல்லது லூக்கோவொரின் (leucovorin) என்பது புற்றுநோய்க்கு எதிரான ஒரு மருந்து வகையாகும். பொதுவாக கால்சியம் அல்லது சோடியம் ஃபொலினேட்டு ( அல்லது கால்சியம் அல்லது சோடியம் லூக்கோவொரின் ) சேர்மங்களால் ஆக்கப்பட்ட இச்சேர்மம் ஒரு எதிர்ப்பாற்றல் தூண்டியாகும். மீத்தோடிரெக்சேட்டு[2] என்ற மருந்து பங்குபெறும் புற்றுநோய் வேதிச்சிகிச்சையில் இச்சேர்மம் உபயோகமாகிறது. 5 புளோரசில் என்ற செயலியுடன் கூட்டாக இணைத்தும் புற்று நோய்க்கு எதிரான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

பொலினிக் அமிலம்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(S)-2-[4-[(2-amino-5-formyl-4-oxo-5,6,7,8-
tetrahydro-1H-pteridin-6-yl)methylamino]
benzoyl]aminopentanedioic acid
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை A(AU) C(US)
சட்டத் தகுதிநிலை ?
வழிகள் சிரை வழியாகவும் வாய் வழியாகவும்
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு மூலக்கணியம்[1]
  • 97% (25 மில்லி கிராம்)
  • 75% (50 மில்லி கிராம்)
  • 37% (100 மில்லி கிராம்)
புரத இணைப்பு ~15%
வளர்சிதைமாற்றம் -
அரைவாழ்வுக்காலம் 6.2 மணி
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 1492-18-8
ATC குறியீடு V03AF03
பப்கெம் CID 6006
DrugBank APRD00698
ChemSpider 5784 Y
UNII RPR1R4C0P4 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C20

H23 Br{{{Br}}} N7 O7  

மூலக்கூற்று நிறை 473.44 g/mol
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C20H23N7O7/c21-20-25-16-15(18(32)26-20)27(9-28)12(8-23-16)7-22-11-3-1-10(2-4-11)17(31)24-13(19(33)34)5-6-14(29)30/h1-4,9,12-13,22H,5-8H2,(H,24,31)(H,29,30)(H,33,34)(H4,21,23,25,26,32)/t12?,13-/m0/s1 Y
    Key:VVIAGPKUTFNRDU-ABLWVSNPSA-N Y

இயங்கும் விதம்

தொகு

ஃபொலினிக் அமிலமானது வைட்டமினான டெட்ரா ஹைட்ரோ ஃபோலிக் அமிலத்தின் 5-ஃபார்மைல் வழிப்பெறுதி ஆகும். எனவே, இது ஃபோலிக் அமிலத்திற்கு இணையான வைட்டமின் பண்பைப் பெற்றுள்ளது. வெறும் ஃபோலிக் அமிலம் மட்டும் நோயாளிகளுக்குத் தருவோமாயின் அதன் வளர்சிதைமாற்றம் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளால் தடுக்கப்பட்டு விளைவுகள் ஏற்படாது. ஃபொலினிக் அமிலமோ டை ஹைட்ரோ ஃபோலேட் ரிடக்டேசு நொதியின் (DHFR) உதவியின்றியே செயல்வடிவம் பெறுகிறது. (புற்று நோய் எதிர்ப்பு மருந்தான மீத்தோடிரெக்சேட் ஃபொலினிக் அமிலமோ டை ஹைட்ரோ ஃபோலேட் ரிடக்டேசு நொதியைத் தடுக்கிறது)

நோய்நீக்கிப் பயன்கள்

தொகு

மேலே கூறியபடி இது மீத்தோடிரெக்சேட், 5-ஃபுளுரோ யுராசில் போன்ற மருந்துகள் தந்த பின் நம் உடலில் விரைவாகப் பகுப்படையும் செல்களான எலும்பு மச்சை மற்றும் உணவுச் செரிமானப் பாதை செல்களைக் காப்பாற்ற உதவுகிறது.

மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியது

தொகு

இம் மருந்தை மூளை உறைகளுக்குள் செலுத்தி விடக் கூடாது. அவ்வாறு செய்தால் மரணம் உள்ளிட்ட கொடிய பக்க விளைவுகள் ஏற்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. விக்சனரியில் மூலக்கணியம், விக்சனரியில் மூலக்கணியம்
  2. Keshava, Channa; Keshava, Nagalakshmi; Whong, Wen-Zong; Nath, Joginder; Ong, Tong-man (1998). "Inhibition of methotrexate-induced chromosomal damage by folinic acid in V79 cells". Mutation Research/Fundamental and Molecular Mechanisms of Mutagenesis 397 (2): 221–8. doi:10.1016/S0027-5107(97)00216-9. பப்மெட்:9541646. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலினிக்_அமிலம்&oldid=2915771" இலிருந்து மீள்விக்கப்பட்டது