பொலேசியத் தாழ்நிலம்
பொலேசியத் தாழ்நிலம் (Polesian Lowland) என்பது கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் தென்மேற்கு பகுதியில் தினேப்பர் ,பிரிப்பியாத், தெசுனா ஆகிய ஆறுகளுடன் அமைந்துள்ள ஒரு வடிநிலப் பகுதியாகும். இப்பகுதி பெலருஸ்-உக்ரைன் எல்லைப் பகுதி வரை நீண்டுள்ளது. இந்தத் தாழ்நிலத்தின் கிழக்குப் பகுதி உருசியாவின் பிரையான்சுக் மாகாணம் வரை நீண்டுள்ளது.
போலேசியத் தாழ்நிலம் Polesian Lowland | |
---|---|
போலேசியாவின் எல்லை தான்டிய பகுதியின் ஒரு பிரிவு | |
கிழக்கு ஐரோப்பாவின் போலேசியா பகுதி கடும் பச்சையில் தரப்பட்டுள்ளது. இக்கண்டத்தின் மிகப் பெரும் வனப்பகுதிகளில் ஒன்று. | |
நாடுகள் | உக்ரைன், பெலருஸ், உருசியா, போலந்து |
இந்த தாழ்நிலத்தின் பரப்பு 270,000 சதுரகிமீ (100,000 சதுர மைல்கள்). பொலேசியத் தாழ்நிலம் பெரும்பாலும் மணல் பாங்கான சதுப்புநிலப் பள்ளத்தாக்குகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதியின் சராசரி உயரம் 150 மீ முதல் 200 மீட்டர் வரை (490-660அடி) வேறுபடுகிறது, இப்பகுதியின் உயர்ந்த இடம் 316 மீட்டர் (1037 அடி) உயரம் கொண்ட ஓவ்ருச் முகடு ஆகும்.[1]
குறிப்புகள்
தொகு- ↑ О. М. Маринич, Polesian Lowland (Poliska nizovina) at Ukrainian Soviet Encyclopedia (Internet Archive).