பொலோனியம் ஐதரைடு

வேதிச் சேர்மம்

பொலோனியம் ஐதரைடு (Polonium hydride) என்பது PoH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொலோனியம் டை ஐதரைடு, ஐதரசன் பொலோனைடு, பொலேன் போன்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. 36.1 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கிறது[1]. அறை வெப்பநிலையில் இது ஒரு நீர்மமாகக் காணப்படுகிறது. தண்ணீருக்கு அடுத்ததாக இப்பண்பை வெளிப்படுகின்ற இரண்டாவது சால்கோசன் பொலோனியம் ஐதரைடு ஆகும். மிகவும் நிலைப்புத் தன்மை இல்லாத இச்சேர்மம் எளிதில் பொலோனியமாகவும் ஐதரசனாகவும் சிதைவடைகிறது. அனைத்து பொலோனியம் சேர்மங்களைப் போல இதுவும் கதிரியக்கப் பண்பை கொண்டுள்ளது. எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் நிலைப்புத் தன்மையற்றதாகவும் உள்ள இச்சேர்மத்திலிருந்து பல பொலோனைடுகளை வழிப்பெறுதிகளாக வருவிக்க முடியும் [2].

பொலோனியம் ஐதரைடு
Space-filling model of the hydrogen polonide molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் ஐதரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலேன்
இனங்காட்டிகள்
31060-73-8
ChEBI CHEBI:30444
ChemSpider 22383
Gmelin Reference
25163, 169602
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23941
  • [PoH2]
பண்புகள்
PoH2
வாய்ப்பாட்டு எடை 210.998 கி/மோல்
உருகுநிலை −35.3 °C (−31.5 °F; 237.8 K)[1]
கொதிநிலை 36.1 °C (97.0 °F; 309.2 K)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நீரின் பண்புகள்
ஏனைய நேர் மின்அயனிகள் TlH3
பிளம்பேன்
BiH3
HAt
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தனிமங்களை ஒன்றாகச் சேர்த்து சூடாக்கும்போது நேரடி வினை மூலம் பொலோனியம் ஐதரைடை உருவாக்க முடியாது. பொலோனியம் டெட்ராகுளோரைடுடன் (PoCl4) இலித்தியம் அலுமினியம் ஐதரைடைச் (LiAlH4) சேர்த்து வினைபுரியச் செய்வதால் தனிமநிலை பொலோனியம் மட்டுமே உருவாகும். இத்தயாரிப்பு முறை, ஐதரோகுளோரிக் அமிலத்துடன் மக்னீசியம் பொலோனைடு (MgPo) சேர்த்து வினைபுரியச் செய்தல் போன்ற தயாரிப்பு முறைகள் உட்பட மற்ற பிற தயாரிப்பு பாதைகள் அனைத்தும் வெற்றிபெற இயலாத வழிகளேயாகும். இந்த தொகுப்பு வழிகள் யாவும் தோல்வியில் முடியக் காரணம் பொலோனியம் ஐதரைடு உருவாகும்போது கதிரியக்கப் பகுப்பு அடைகிறது என்பதே காரணமாகும் [3].

ஐதரோகுளோரிக் அமிலத்தை பொலோனியம் பூசப்பட்ட மக்னீசியம் தகடுடன் வினைபுரியச் செய்வதன் மூலம் சுவடு அளவுகளில் பொலோனியம் ஐதரைடு தயாரிக்கப்படலாம். கூடுதலாக,ஐதரசனால் நிறைவுற்ற பலேடியம் அல்லது பிளாட்டினத்தில் இச்சுவடு அளவு பொலோனியம் ஐதரைடு பரவியிருக்கும். போலோனியம் ஐதரைடின் உருவாக்கம் மற்றும் இடம்பெயர்வு இதற்குக் காரணமாக இருக்கலாம் [3].

சுவடு அளவு பொலோனியம் ஐதரைடுவின் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் பொலோனியம் உலோகத்திற்கும் அப்போதே உருவாகிக் கொண்டிருக்கும் புதிய ஐதரசனுக்கும் இடையிலான வினையில் பொலோனியம் ஐதரைடை உருவாக்க முடியும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன [3].

பண்புகள்

தொகு

பொலோனியம் ஐதரைடு பெரும்பாலான பிற உலோக ஐதரைடுகளைக் விட அதிக சகபிணைப்பு கொண்ட சேர்மமாகும். ஏனெனில் பொலோனியம் உலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் ள் இரண்டிற்கும் இடையிலான எல்லையை கடந்து காலூன்றியிருக்கிறது. மற்றும் இது அலோக பண்புகள் சிலவற்றையும் கொண்டுள்ளது. ஐதரசன் குளொரைடு போன்ற உலோக ஆலைடுக்கும் சிடானன் (SnH4) எனப்படும் உலோக ஐதரைடுக்கும் இடையே உள்ள ஓர் இடைநிலை பொருளாகக் காணப்படுகிறது.

ஐதரசன் செலீனைடு , ஐதரசன் தெலூரைடு ,மற்றும் பிற எல்லைக்கோட்டு ஐதரைடுகளைப் போன்ற பண்புகளை பொலோனியம் ஐதரைடு கொண்டிருக்க வேண்டும். அறை வெப்பநிலையில் இது மிகவும் நிலையற்றது. எனவே அடிப்படை பொலோனியம் மற்றும் ஐதரசனாக மீள்வதை தடுக்க உறைபொருள் வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும்; ஐதரசன் தெலூரைடு மற்றும் ஐதரசன் செலீனைடு போன்றதொரு வெப்பங்கொள் சேர்மமாக பொலோனியம் ஐதரைடு கருதப்படுகிறது. மேலும் இதன் இயைபுக் கூறுகளாக சிதைந்து,அச்செயல்பாட்டின் மூலம் வெப்பத்தை வெளியிடுகிறது. பொலோனியம் ஐதரைடின் சிதைவில் கொடுக்கப்படும் வெப்பத்தின் அளவு 100 கிலோயூல்/ மோல் அளவு ஆகும். அனைத்து ஐதரசன் சால்கோசனைடுகளில் இதுவே பெரியதுமாகும்.

நீர் ஓரு திரவமாகக் கருதப்படுவதற்குரிய அதே காரணம் பொருந்தாது என்றாலும் வாண்டர் வால்சு விசைகள் காரணமாக பொலோனியம் ஐதரைடு ஒரு திரவமாக கருதப்படுகிறது.

மற்ற ஐதரசன் சால்கோசனைடுகள் போல பொலோனியமும் இரண்டு வகையான உப்புகளை உருவாக்கித் தரும் என முன் கணிக்கப்பட்டுள்ளது. Po2− எதிர்மின் அயனிகளால் ஆன பொலோனைடுகள், பொலோனியம் ஐதராக்சைடிலிருந்து கிடைக்கும் -PoH குழுவைக் கொண்ட தயோல், செலீனோல், தெலூரோல் வரிசைச் சேர்மங்கள் என்பவை அவ்விரண்டு வகையான உப்புகளாகும். பொலோனியம் ஐதரைடிலிருந்து கிடைக்கும் உப்புகள் எதுவும் அறியப்படவில்லை. ஒரு பொலோனைடு உப்புக்கு எடுத்துக்காட்டாக ஈயம் பொலோனைடு (PbPo) உப்பைக் கூறலாம். பொலோனியத்தின் ஆல்பா சிதைவில் ஈயம் உருவாகும்போது இயற்கையாகவே இது தோன்றுகிறது [4].

பொலோனியம் மற்றும் அதன் சேர்மங்களின் தீவிர கதிரியக்கத்தன்மை காரணமாக பொலோனியம் ஐதரைடுடன் வேலை செய்வது கடினம், மேலும் இது மிகவும் குறைவான சுவடு அளவுகளில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அதன் இயற்பியல் பண்புகள் நிச்சயமாக அறியப்படவில்லை [3]. பொலோனியம் ஐதரைடு அதன் ஒத்தவரிசைச் சேர்மங்களைப் போல நீருடன் சேர்ந்து ஓர் அமிலக் கரைசலை உருவாக்குகிறதா, அல்லது இது ஓர் உலோக ஐதரைடு போல செயல்படுகிறதா என்பதும் கூட அறியப்படவில்லை..

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Holleman, Arnold F.; Wiberg, Egon; Wiberg, Nils (1985). Lehrbuch der Anorganischen Chemie (in German) (102 ed.). Walter de Gruyter. p. 627. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-017770-1.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  3. 3.0 3.1 3.2 3.3 Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. pp. 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120236046. பார்க்கப்பட்ட நாள் June 7, 2012.
  4. Weigel, F. (1959). "Chemie des Poloniums". Angewandte Chemie 71: 289–316. doi:10.1002/ange.19590710902. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலோனியம்_ஐதரைடு&oldid=2868382" இலிருந்து மீள்விக்கப்பட்டது