போகாஹொண்டாஸ்
போகாஹொன்டாஸ் (Pocahontas, சு. 1596 – மார்ச் 1617) என்பவர் பூர்வீக அமெரிக்கப் பெண் ஆவார். இவர் பொவ்ஹாட்டன் பழங்குடி மக்களினத்தைச் சேர்ந்தவர். வர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனில் உள்ள காலனித்துவ குடியேற்றத்துடன் இவரது தொடர்புக்காக குறிப்பிடப்படுகிறார். இவர் வர்ஜீனியாவின் டைட்வாட்டர் பகுதியைச் சூழ்ந்திருக்ககும் செனகோம்மாகாவில் இருந்த பழங்குடியினரின் முதன்மையான தலைவரான போஹாடனின் மகளாவார். [1] .
போகாஹொண்டாஸ் Pocahontas | |
---|---|
சைமன் டி பாஸே, 1616 இல் வரைந்த ஓவியம் | |
பிறப்பு | அமோனிட் (பிறகு மடோகா என அழைக்கபட்டார்) அண். 1596 வெரோவோகோமோகோ, செனாகோம்மாகா |
இறப்பு | மார்ச்சு 1617 (அகவை 20–21) இங்கிலாந்து |
கல்லறை | செயின்ட் ஜார்ஜ் தேவாலயம், கிரேவ்சென்ட் |
மற்ற பெயர்கள் | ரெபேக்கா ரோல்ஃப் |
அறியப்படுவது | ஜேம்சுடவுன் காலனியுடன் தொடர்பு, ஜான் ஸ்மித்தின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது, மேலும் கிறிஸ்தவத்திற்கு மாறினார். |
பட்டம் | இளவரசி மாடோகா |
பெற்றோர் | பவ்ஹட்டடன் (தந்தை) |
வாழ்க்கைத் துணை | ஜான் ரோல்ப் (தி. 1614) |
பிள்ளைகள் | தாமஸ் ரோல்ஃப் |
கிபி 1607 ஆம் ஆண்டு போகாஹொண்டாசின் சிற்றூருக்கு ஆங்கிலேயர்களின் மூன்று கப்பல்கள் வந்தன. பழங்குடியின மக்கள் ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சினர். ஆனால் 12 வயது போகாஹொண்டாஸ் ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் கவனித்தாள். ஆங்கிலேயர்கள் பழங்குடியினருடன் வணிகம் செய்யத் தொடங்கினர். அப்பகுதியில் ஜேம்ஸ் டவுன் என்ற நகரை உருவாக்கி அங்கு கோட்டைக் கட்டிக் கொண்டனர்.
கோட்டையில் இருந்த கேப்டன் ஜான் ஸ்மித் மீது போகாஹொண்டாஸ் அன்பு பாராட்டினாள். போஹாடன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது அங்கு வந்த கேப்டன் ஜான் ஸ்மித்தை பழங்குடியினர் சிறைபிடித்தனர். ஸ்மித்துக்கு பாவ்ஹாடன் தண்டனையை அறிவித்தார். ஆனால் போகாஹொண்டாசின் கோரிக்கையின் பேரில் அவளின் தந்தை அவரை விடுவித்தார். போகாஹொண்டாஸ் அடிக்கடி ஜேம்ஸ் டவுனுக்கு சென்றுவந்தாள். இந்நிலையில் கிபி. 1608 ஆம் ஆண்டு போகாஹொண்டாஸ் 1613 ஆம் ஆண்டு ஆங்கிலேய குடியேற்றவாசிகளால் சிறைபிடிக்கப்பட்டார். இவளைப் பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு பாவ்ஹாடனிடம் தங்களுக்கு தேவையான உணவு, ஆயுதங்கள் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் பெற்றுக் கொண்டனர். அவளை அவளின் சொந்த கிராமத்துக்கு அனுப்பவில்லை. அவள் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில், அவளை கிறிஸ்தவ சமயத்துக்கு மாற ஊக்குவித்து, ரெபேக்கா என்ற பெயரில் திருமுழுக்கு அளிக்கபட்டாள். இவள் 1914 ஏப்ரலில் சுமார் 17 அல்லது 18 வயதில் புகையிலை தோட்டக்காரர் ஜான் ரோல்பை மணந்தாள். இந்த இணையருக்கு 1615 சனவரியில் தாமஸ் ரோல்பைப் என்ற மகன் பிறந்தான். [2]
இவளின் துருமணத்தின் வழியாக ஆங்கிலேயர்களும் பழங்குடியின மக்களும் சுமூகமாக ஆயினர். இதைபோக்காஹான்டசின் அமைதி என்று குறிப்பிடுகின்றனர்.[3] 1616 ஆம் ஆண்டில், ரோல்ஃப்ஸ் இவரை லண்டனுக்கு அழைத்ததுச் சென்றார். இந்தப் பயணத்தில் இவள் நியூ இங்கிலாந்தில் இருந்த "பட்டுக்செட் பூர்வீக அமெரிக்கர்" ஸ்குவாண்டோவைச் சந்தித்திருக்கலாம். இவர் அங்கு பிரபலமானவராக, போற்றப்பட்டார். மேலும் வைட்ஹால் அரண்மனையில் மாஸ்க்கி எனப்படும் இசைநாடகக் கூத்து நாடகத்தில் கலந்துகொண்டார். 1617 இல், ரோல்ஃப்ஸ் வர்ஜீனியாவுக்குப் பயணம் செய்தார். லண்டனின் சூழல் போகாஹொண்டாசுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. நோயால் தாக்கபட்டு இங்கிலாந்தின் கிரேவ்சென்டில் 20 அல்லது 21 வயதில் இறந்தார். அவர் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில், கிரேவ்சென்டில் அடக்கம் செய்யப்பட்டார்; இவரது கல்லறையின் சரியான இடம் தெரியவில்லை, ஏனெனில் தேவாலயம் தீயினால் அழிந்து அதன் பின்னர் மீண்டும் கட்டப்பட்டது. [2]
இவர் உயிரிழந்த செய்தி அறிந்து பாவ்ஹட்டன் கிராமம் வேதனையுற்றது. சில ஆண்டுகளாக இருந்துவந்த அமைதி உடன்படிக்கை முறித்துக் கொள்ளபட்டது. பழங்குடிகளுக்கும், குடியேறிகளுக்கும் நீண்டகாலம் சண்டைகள் நடந்தன. இறுதியில் பூர்குடிகள் ஒடுக்கபட்டனர்.
போகாஹொண்டாஸ் விருப்பத்துடன் ஆங்கிலேயருக்கு உதவினாளா, அச்சுறுத்தலினால் உதவினாளா என்பது தெளிவாக தெரியவில்லை. பின்னர் ஆங்கிலேயருக்கு உதவிய அமைதிக்கான இளவரசியாள போகாஹான்டஸ் சித்தரிக்கபட்டார். இவ்வாறு அமெரிக்காவில் உள்ள பல இடங்கள், அடையாளங்கள், தயாரிப்புகளுக்கு போகாஹொண்டாஸ் பெயரிடப்பட்டது. இவரது கதை பல ஆண்டுகளாக புனைவுவாக பயன்படுத்தபடுகிறது. இதில் பல அம்சங்கள் கற்பனையானவை. ஆங்கில ஆய்வாளர் ஜான் சிமித் இவரைப் பற்றி கூறிய பல கதைகள் இவரது அதிகாரப்பூர்வ சந்ததியினரால் மறுக்கப்பட்டுள்ளன. [4] இவர் கலை, இலக்கியம், திரைப்படத்தின் பொருளாக இருந்துள்ளார். வர்ஜீனியாவின் முதல் குடும்ப உறுப்பினர்கள், முதல் பெண்ணியவாதி எடித் வில்சன், அமெரிக்க மேற்கத்திய நடிகர் கிளென் ஸ்ட்ரேஞ்ச், வானியலாளர் பெர்சிவால் உலோவெல் உட்பட பல பிரபல நபர்கள் இவரது மகன் மூலமாக வந்த வழித்தோன்றல்களாக கூறிக்கொள்கின்றனர். [5]
குறிப்புகள்
தொகு- ↑ "A Guide to Writing about Virginia Indians and Virginia Indian History" (PDF). Commonwealth of Virginia, Virginia Council on Indians. January 2012. Archived from the original (PDF) on February 24, 2012. பார்க்கப்பட்ட நாள் July 19, 2012.
- ↑ 2.0 2.1 Stebbins, Sarah J (August 2010). "Pocahontas: Her Life and Legend". National Park Service. U.S. Department of the Interior. பார்க்கப்பட்ட நாள் April 7, 2015.
- ↑ "குழந்தை மேதைகள் 05: அமைதியின் இளவரசி போகாஹான்டஸ்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
- ↑ Price, pp. 243–244
- ↑ Shapiro, Laurie Gwen (June 22, 2014). "Pocahontas: Fantasy and Reality". Slate. The Slate Group. பார்க்கப்பட்ட நாள் April 7, 2015.