போக்யோக் ஆங் சான் அரங்கம்

மியன்மார், யங்கோன் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு அரங்கம்

போக்யோக் ஆங் சான் அரங்கம் அல்லது ஆங் சான் அரங்கம் (ஆங்கிலம்: Bogyoke Aung San Stadium) என்பது மியன்மார், யங்கோன் நகரத்தில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு அரங்கமாகும்.[1]

போக்யோக் ஆங் சான் அரங்கம்
Aung San Stadium
இடம் மிங்கலா டாங்ன்யூன்ட், யங்கோன், மியன்மார்
அமைவு 16°47′2″N 96°9′38″E / 16.78389°N 96.16056°E / 16.78389; 96.16056
திறவு
உரிமையாளர் தே சா
Tay Za
தரை புல்
முன்னாள் பெயர்(கள்) பர்மா தடகள அரங்கம்
(Burma Athletic Association Ground)
குத்தகை அணி(கள்) ஐக்கிய யாங்கோன் காற்பந்து சங்கம்
(Yangon United FC)
அமரக்கூடிய பேர் 40,000[1]
போக்யோக் ஆங் சான் அரங்கம்
போக்யோக் ஆங் சான் அரங்கம் (2)

இந்த அரங்கத்தின் கட்டுமானம், 1908-ஆம் ஆண்டில் ஒரு துடுப்பாட்ட அரங்கமாகத் தொடங்கபட்டது. 1910-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்குப் பர்மா தடகள அரங்கம் (Burma Athletic Association Ground) என பெயரிடப்பட்டது. இதன் 400 மீட்டர் ஓடுபாதை 1935-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[2]

மேலோட்டம் தொகு

போக்யோக் (Bogyoke) என்றால் பர்மிய மொழியில் தளபதி என்று பொருள். 1953-ஆம் ஆண்டு மியான்மர், சுதந்திரம் அடைந்ததும், பர்மாவின் தந்தையார் எனும் புகழப்படும் தளபதி ஆங் சான் (Aung San) என்பவரின் பெயர் அந்த அரங்கத்திற்குச் சூட்டப்பட்டது.[3]

40,000 இருக்கைகள் கொண்ட அரங்கம். 1980-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதி வரை மியான்மரின் மிகப் பெரிய மைதானமாகவும்; தேசிய மைதானமாகவும் விளங்கியது. அரங்கத்தின் நுழைவாயிலில் தளபதி ஆங் சான் மற்றும் அவரின் மகள் ஆங் சான் சூ கியின் உருவப் படங்கள் இடம்பெற்று உள்ளன.[3]

தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுப் போட்டிகள் தொகு

இந்த அரங்கம் 1961; 1969; தென்கிழக்கு ஆசிய தீபகற்ப விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத் தளமாக விளங்கியது.

தற்சமயம் இந்த அரங்கத்திற்குப் பழைய மவுசு இல்லை. அனைத்துலக அளவிலான போட்டிகள் நடைபெறுவது இல்லை. மியான்மர் தேசிய கால்பந்து போட்டிகளுக்கு மட்டும் அடிக்கடி பயன்படுத்தப் படுகிறது.

ஆங் சான் தேசிய உள்விளையாட்டு அரங்கம் தொகு

போக்யோக் ஆங் சான் அரங்கத்திற்கு அருகில் ஆங் சான் தேசிய உள்விளையாட்டு அரங்கம் (Aung San National Indoor Stadium) அமைந்துள்ளது. இந்த அரங்கம் உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது.

மேற்கோள் தொகு

  1. 1.0 1.1 "Stadiums in Myanmar". World Stadiums. Archived from the original on 2013-06-23. பார்க்கப்பட்ட நாள் 2008-11-24.
  2. "မြန်မာ့ ပြေးခုန်ပစ် ဆီးဂိမ်းမှာ ဟန်ပါ့မလား". Irrawady News.
  3. 3.0 3.1 "The Bogyoke Aung San Stadium was once Yangon's greatest sports stadium, with a capacity of about 40,000. It opened in 1930 as the grounds for the Burma Athletic Association (BAA). After independence in 1953, authorities renamed it to honour Burma's national hero Aung San". பார்க்கப்பட்ட நாள் 23 March 2022.