ஆங் சான் சூச்சி

காந்தியவாதி
(ஆங் சான் சூ கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்[1].

ஆங் சான் சூச்சி
Aung San Suu Kyi :பகுப்பு:நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்
டாவ் ஆங் சான் சூச்சி
மியான்மரின் அரச ஆலோசகர்
பதவியில்
6 ஏப்ரல் 2016 – 1 பெப்ரவரி 2021
குடியரசுத் தலைவர்வின் மியின்ட்
முன்னையவர்தெயின் செய்ன் (பிரதமர், 2011)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 19, 1945 (1945-06-19) (அகவை 79)
ரங்கூன்,  மியான்மர்
வாழிடம்(s)யங்கோன்,  மியான்மர்
அறியப்படுவதுமக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

இவரது தந்தை ஆங் சான் அன்றைய பிரித்தானிய ஆட்சியின் கீழ் தலைமை அமைச்சராக இருந்தவர். 1947 இல் இவர் படுகொலை செய்யப்பட்டார்[2]. சூச்சீ 1990 இல் ராஃப்டோ பரிசு, சாக்கரோவ் பரிசு, மற்றும் நோபல் பரிசு (1991) ஆகியவற்றைப் பெற்றார். ஐரோப்பிய யூனியன் அமைப்பின் சார்பில் வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான சக்காரோவ் விருது 1990ம் ஆண்டு ஆங்சான் சூச்சிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும், அக்காலகட்டத்தில் இவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததால் அதை பெற இயலவில்லை. சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு அவ்விருதினை 2013இல் ஆங் சான் சூ கீ பெற்றுக் கொண்டார்.[3] 1992 இல் இந்திய அரசின் சவகர்லால் நேரு அமைதிப் பரிசைப் பெற்றார். 2007 இல் கனடா அரசு இவரை அந்நாட்டின் பெருமைய குடிமகளாக அறிவித்தது [4]; இப்படி அறிவிக்கப்பெற்றுப் பெருமை பெற்றவர்கள் ஐவரே.[5]. 1990 இல் மியான்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இவரது கட்சி பெரும்பான்மையான இடங்களை வென்றது. ஆங் சான் சூச்சியின் மக்களாட்சிக்கான தேசிய அமைப்புக் கட்சி நாட்டின் 59% வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தின் இடங்களில் 81% இடங்களை (485 மொத்த இடங்களில் 392 இடங்களை) வென்றது.[6][7][8][9][10][11][12] ஆனாலும் இவர் தேர்ந்தலுக்கு முன்னரே வீட்டுக் காவல் சிறையில் அடைக்கப்பட்டதால் நாட்டின் பிரதமராக முடியவில்லை. சூலை 20, 1989 முதல் நவம்பர் 10, 2010 வரையிலான 21 ஆண்டுக்காலத்தில் 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்[13].

வாழ்க்கை

தொகு

1945 சூன் 19 இல் பிறந்த ஆங்சான் சூச்சிக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆம் ஆண்டு சூலை 19 இல் அவரது தந்தை செனரல் ஆங் சான் (Aung San) படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 சனவரி 04 ஆம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையானது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூச்சி, 1972 சனவரி 01 இல் திபேத்திய, பூட்டான் பண்பாட்டு ஆய்வாளரும் அறிஞருமானான பிரித்தானியர் மைக்கேல் ஏரிசு (Michael Aris) என்பவரை மணந்தார். 1988 இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 செப்டம்பர் 27 இல் உருவாக்கப்பட்ட மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு (NDL, National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 டிசம்பர் 27 இல் தாயார் மரணமடைய, 1989 சனவரி 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூச்சி தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 சூலை 20 இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 மே 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 81% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சிப் பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்சான் சூச்சி வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.

2021 ஆட்சி கவிழ்ப்பு

தொகு

2021 பெப்ரவரி 1 ஆம் நாள் மியான்மர் ஆட்சி கவிழ்ப்பின் போது இவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மியான்மர் பொதுத்தேர்தல்களின் முடிவுகள் மோசடியானது என்ற அறிவிப்பை வெளியிட்டு இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் மக்களாட்சி மரபின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.[14]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Burma releases Aung San Suu Kyi. பிபிசி, 13 நவம்பர் 2010.
  2. Nobel Prize.org
  3. "ஐரோப்பிய யூனியனின் பரிசை ஆங் சான் சூ கீ பெற்றார்". தீக்கதிர்: p. 6. 22 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. 
  4. "Canada makes Myanmar's Suu Kyi an honorary citizen". Reuters. 17 October 2007. http://www.reuters.com/article/idUSN17350334. பார்த்த நாள்: 28 December 2010. 
  5. "Update: Mawlana Hazar Imam is made an honorary citizen of Canada". The Ismaili. 19 June 2009. Archived from the original on 4 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 28 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Aung San Suu Kyi should lead Burma, Pravda Online. 25 September 2007
  7. The Next United Nations Secretary-General: Time for a Woman பரணிடப்பட்டது 2007-11-25 at the வந்தவழி இயந்திரம். சமத்துவம் இப்போது.org. November 2005.
  8. MPs to Suu Kyi: You are the real PM of Burma. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 June 2007
  9. Walsh, John. (February 2006). Letters from Burma பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம். Shinawatra International University.
  10. Deutsche Welle Article: Sentence for Burma's Aung San Suu Kyi sparks outrage and cautious hope Quote: The NLD won a convincing majority in elections in 1990, the last remotely fair vote in Burma. That would have made Suu Kyi the prime minister, but the military leadership immediately nullified the result. Now her party must decide whether to take part in a poll that shows little prospect of being just.
  11. The Hon. PENNY SHARPE பரணிடப்பட்டது 2010-03-30 at the வந்தவழி இயந்திரம் Speech: In 1990 Daw Aung San Suu Kyi stood as the National League for Democracy's candidate for Prime Minister in the Burmese general election. The National League forDemocracy won in a landslide. But instead of her taking her rightful place as Burma's new Prime Minister, the military junta refused to hand over power. Page: 52
  12. A twist in Aung San Suu Kyi's fate Article: How a Missouri Mormon may have thwarted democracy in Myanmar. By Patrick Winn — GlobalPost Quote: "Suu Kyi has mostly lived under house arrest since 1990, when the country's military junta refused her election to the prime minister's seat. The Nobel Peace Laureate remains backed by a pro-democracy movement-in-exile, many of them also voted into a Myanmar parliament that never was." Published: 21 May 2009 00:48 ETBANGKOK, Thailand
  13. Burma releases Aung San Suu Kyi. BBC News, 13 November 2010.
  14. "Myanmar coup: Aung San Suu Kyi detained as military seizes control". BBC News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2021-02-01. பார்க்கப்பட்ட நாள் 2021-02-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_சான்_சூச்சி&oldid=3816078" இலிருந்து மீள்விக்கப்பட்டது