போக நந்தீசுவரர் கோவில்
கருநாடக மாநிலத்தின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
போக நந்தீசுவரர் கோவில் (Bhoga Nandeeshwara Temple) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் நந்தி மலைக்கு அருகேயுள்ள நந்தி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். பெங்களூரில் இருந்து 60 கிமீ தூரத்தில் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள[1] இக்கோவில் கர்நாடகாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மூலக் கோவில் கிபி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் திராவிட முறைப்படி திருத்தப்பட்டது.[2] இதைக் கட்டியவர்கள் சோழர்கள் என்று கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ V L, Prakasha. "From here and there". Deccan Herald. http://www.deccanherald.com/content/77974/from-here-amp-there.html. பார்த்த நாள்: 27 June 2013.
- ↑ Indian Railways. 2004. p. 54. பார்க்கப்பட்ட நாள் 26 June 2013.