போசிசின் பிலோமீலஸ்

மூன்றாம் புனிதப் போரில் போசியன்களின் தளபதி; ஓனோமார்கசின் சகோதரர் மற்றும் தியோடிமசின் மகன்

போசிசின் பிலோமீலஸ் (Philomelos of Phocis, கிரேக்கம்: Φιλόμηλος‎ ) என்பவர் மூன்றாம் புனிதப் போரில் போசிசின் தளபதியாக இருந்தவர். இவர் ஓனோமார்கசின் சகோதரரும், தியோடிமசின் மகனும் ஆவார்.

வாழ்கை குறிப்பு

தொகு

போசிசின் ஆட்சியாளரான பிலோமீலஸ், எசுபார்த்தாவின் உதவியுடன், ஒரு கூலிப்படையை அமைத்து, லோக்ரியர்களை தோற்கடித்தார். பின்னர் இவர் தெல்பியை வென்று உள்ளூர் ஆரக்கிளை முழுமையாக தன் கட்டுப்படில் கொண்டுவந்தார். பின்னர் ஆரக்கிளின் உரிமையாளராக தான் விரும்பியதைச் செய்ய தனக்கு உரிமை உள்ளது என்று ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஆரக்கிள்ளின் தலைமை பூசாரியை (பித்தியா) கட்டாயப்படுத்தினார். அதன்பிறகு, இவர் கோயிலின் பொக்கிசங்களையும், அப்பல்லோ கடவுளுக்கு செலுத்தபட்டிருந்த மதிப்புமிக்க காணிக்கை பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார். பின்னர் அதைக்கொண்டு 10,000 பேர் கொண்ட கூலிப்படைகளைக் கொண்ட கூடுதல் படைகளை உருவாக்கினார். எசுபார்த்தா, ஏதென்சு, கொரிந்து ஆகியவற்றின் ஆதரவுடனும், உதவியுடனும் பிலோமீலஸ் மீண்டும் லோக்ரியர்களையும், தெசலியர்களையும் வென்றார். ஆனால் இவர் கிமு 354 இல் போயோட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் ஒரு குன்றிலிருந்து குதித்து இறந்தார். [1]

குறிப்புகள்

தொகு
  1. Lampsas Giannis, Dictionary of the Ancient World (Lexiko tou Archaiou Kosmou), Vol. IV, Athens, Domi Publications, 1984, p. 784.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போசிசின்_பிலோமீலஸ்&oldid=3604596" இலிருந்து மீள்விக்கப்பட்டது