போட்டோர் (Pottore) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். திருச்சூர் நகரிலிருந்து சுமார் 7 அல்லது 8 கிலோமீட்டர் தொலைவில் கோலாழி பஞ்சாயத்தின் ஒரு பகுதியாக போட்டோர் நகரம் அமைந்துள்ளது.

போட்டோர்
Pottore
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்திருச்சூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்8,210
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
வாகனப் பதிவுKL

புவியியல் அமைப்பு

தொகு

10°34'25" வடக்கு, 76°12'25" கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் போட்டோர் நகரம் பரவியுள்ளது

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1]போட்டோர் நகரத்தின் மக்கள் தொகை 8,210 ஆகும். இத்தொகையில் 49 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 51 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்த நகரத்தின் படிப்பறிவு 85% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 86% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 84% ஆகவும் இருந்தது. போட்டோர் மக்கள் தொகையில் 10% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டோர்&oldid=3575680" இலிருந்து மீள்விக்கப்பட்டது