போதிசேனர்

தமிழக பௌத்த அறிஞர், துறவி

போதிசேனர் (Bodhisena, கிபி 704-760) என்பவர் தமிழக பௌத்த அறிஞரும், துறவியும் ஆவார். இவர் யப்பானுக்குப் பயணம் செய்து கெகோன் பள்ளியை நிறுவினார். அது சீன பௌத்த சமயத்தின் ஹுவாயன் பள்ளியின் யப்பானிய பரப்புகையாகும்.

போதிசேனர்
பிறப்பு704 Edit on Wikidata
இறப்பு760 Edit on Wikidata
Daian-ji Edit on Wikidata

இவர் தங்கி இருந்தது குறித்து ஷோகு நிஹோங்கி என்னும் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு இவர் போடாய்-சென்னா என்று குறிப்பிடப்பட்டார்.

துவக்க ஆண்டுகளில் தொகு

போதிசேனர் கிபி 704 இல் மதுரையில் பிறந்தார். இவர் மஞ்சுசிறீ போதிசத்வரிடமிருந்து மருளியலான அகத்தூண்டுதல் பெற்றார். மஞ்சுசிறீயின் மறுபிறப்பை வுடாய் மலையில் சந்திக்கலாம் என்று கேள்விப்பட்ட இவர் சீனாவுக்குச் சென்றார். இருப்பினும், வூட்டாய் மலையை அடைந்ததும், யப்பானில் மறுபிறப்பு இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. இவர் சீனாவிற்கான பத்தாவது யப்பானிய தூதரான தாஜிஹி நோ மபிடோ ஹிரோனாரியுடன் பழகினார். [1] யப்பானிய துறவி ரிக்கியோவையும் சந்தித்தார்.

யப்பானுக்கு பயணம் தொகு

பேரரசர் ஷோமுவின் அழைப்பின் பேரில், ஹுவாயன் பௌத்தத்தை நிறுவ யப்பான் சென்றார். இவர் யப்பானிய பிரதிநிதிகளான தஜிஹி நோ ஹிரோனாரியுடன் [2] வியட்நாம் மற்றும் கம்போடியாவில் உள்ள சம்பா இராச்சியம் வழியாக பயணம் செய்தார்.

இவர் பயணித்த அதே கப்பலில் மற்ற முக்கிய வரலாற்று பிரமுகர்கள் இருந்தனர்.

இவர்களில் பயணத் தோழர்களில் ஜென்போ மற்றும் கிபி நோ மகிபி ஆகியோர் அடங்குவர். ஜென்போ ஒரு துறவி ஆவார். அவர் சீன பௌத்த நியதியை உருவாக்கிய 5,000 க்கும் மேற்பட்ட புத்தகப் பகுதிகளுடன் சீனாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். கிபி பூத்தையல் கலை, யாழ் வாசித்தல், வெய்ச்சி விளையாட்டு ஆகியவற்றைக் கற்றத் திறமையோடு யப்பானுக்கு சென்று கொண்டிருந்தார்.

யப்பானில் வாழ்க்கை தொகு

பயணக் குழுவினர் கிபி 736 ஆகத்தில் நானிவாவுக்கு ( ஒசாக்கா ) வந்து சேர்ந்தனர். பின்னர் துறவி கியோகியை சந்தித்தார் . [3]

பல கூற்றுகளின்படி, கியோகியும் போதிசேனரும் முற்பிறவி வாழ்க்கையிலிருந்து ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டனர். ஷூய் வகாஷோவின் கூற்றுப்படி, டோடைஜி யோரோகுவை மேற்கோள் காட்டி, புத்தர் தாமரை சூத்திரத்தைப் பிரசங்கித்தபோது இவர்கள் ஒன்றாக கழுகு சிகரத்தில் இருந்ததாக கியோகி கூறினார் . போதிசேனர், "பாரமோன் சோஜோ" ( பிராமணப் பூசாரி) என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர்கள் கபிலவஸ்துவில் ஒன்றாக இருப்பதைக் குறிப்பிடுகிறார். தான் தேடும் போதிசத்துவ மஞ்சுசிறீயின் மறுபிறப்பாக கியோகியை இவர் அங்கீகரித்தார். [4]

கியோகி போதிசேனரை தலைநகரான நாரனுக்கு அழைத்துச் சென்று மன்னனிடம் கொண்டு சேர்த்தார். இவர் அங்கு மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டார். மேலும் டையான்-ஜி என்ற கோயிலில் தங்கவைக்கப்பட்டார். அங்கு கெகோன் பௌத்தத்தப் பிரிவை இவர் நிறுவினார். மேலும் சமசுகிருதத்தையும் கற்பித்தார்.

752 இல், பேரரசர் ஷாமுவால் டோடை -ஜியில் கட்டப்பட்ட பௌத்த கோயிலில் அமைக்கபட்ட வைரோகனா புத்தரின் பிரம்மாண்டமான வெண்கலச் சிலையின் கண் திறப்பு விழாவை நடத்தினார். கண் திறப்பு விழாவில் பொதுவாக புத்தர் சிலையின் கண்களை மூத்த பௌத்த துறவி வர்ணம் தீட்டி திறப்பது வழக்கம். அந்த கவுரவத்தை மன்னர் போதிசேனருக்கு அளித்தார்.

டோமி (நாரா) மலைக்குச் சென்ற பிறகு, போதிசேனர், அங்குள்ள பிரார்த்தனை மண்டபத்திற்கு ரெசன்-ஜி (霊山寺) என்று பெயரிடுமாறு பேரரசரிடம் கேட்டுக் கொண்டார். ஏனெனில் அந்த மலை இந்தியாவில் புத்தர் பிரசங்கித்த மலையை பெருமளவு ஒத்திருப்பதைக் கண்டார். இது கழுகு சிகரம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது யப்பானிய மொழியில் ரியூஜுசென் (霊鷲山).

போதிசேனர் தன் வாழ்நாள் முழுவதும் ஹெய்ஜோ-கியோவில் உள்ள டையான்-ஜியில் (大安寺) வசித்து வந்தார். இவர் கிபி 760 பிப்ரவரி 25, அன்று டையான்-ஜி பௌத்த கோவிலில் இறந்தார். இவரது விருப்பத்தின் பேரில் அருகில் உள்ள மலைப்பகுதியான ரியூஜுசென் (霊鷲山) இல் அடக்கம் செய்யப்பட்டார்.

 
தொடை-ஜி கோவில், நாரா, ஜப்பான்

மரபு தொகு

யப்பானின் பாரம்பரிய அரசவை நடனம், இசையை போன்றவற்றை போதிசேனர் உருவாக்கினார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கலைவடிவங்களில் சில யப்பானில் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறன்றன. [5]

யப்பானிய எழுத்து முறையில் நாற்பத்தேழு எழுத்துக்கள் பௌத்த கோபோ டெய்ஷி (கி.பி. 774-835) என்பவரால் சமசுகிருத எழுத்துக்களின் வடிவத்திற்குப் பிறகு வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சமசுகிருத முறையை அடிப்படையாகக் கொண்ட யப்பானிய பாடத்திட்டத்திட்ட முறை யப்பானில் போதிசேனரின் செல்வாக்கின் காரணமாக வந்தது கூறப்படுகிறது. இது ரிரி நாகயாமாவின் கூற்றுப்படி, "யப்பானிய மொழி இருக்கும் வரை தொடரும்" எனப்படுகிறது. [6]

குறிப்புகள் தொகு

  1. Ambassadors from the islands of immortals: China-Japan relations in the Han-Tang period by Zhenping Wang, page 167
  2. Music from the Tang Court By Laurence Picken, Laurence Ernest Rowland Picken, R. F. Wolpert, page 31
  3. Japanese Buddhism By Charles Eliot, page 225
  4. A Waka Anthology Volume Two: Grasses of Remembrance
  5. Cultural Contacts between BIMSTEC Countries and Japan: An Historical Survey by Sanjukta Das Gupta, CSIRD Discussion Paper: 7/2005, November 2005, (pages 5-6)
  6. "Bodhisena". Tibetan Buddhist Encyclopedia. Estonian Nyingma. பார்க்கப்பட்ட நாள் 24 July 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போதிசேனர்&oldid=3733946" இலிருந்து மீள்விக்கப்பட்டது