போரான் டிரைபுளோரைடு ஈதரேட்டு

போரான் டிரைபுளோரைடு ஈதரேட்டு (Boron trifluoride etherate) என்பது BF3O(C2H5)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். போரான் டிரைபுளோரைடு டையெத்தில் ஈதரேட்டு அல்லது போரான் டிரைபுளோரைடு–ஈதர் அணைவு என்ற பெயர்களில் ஒன்றால் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பொதுவாக BF3OEt2 என்ற சுருக்க வாய்ப்பாட்டால் இது குறிக்கப்படுகிறது. நிறமற்று காணப்படும் இச்சேர்மத்தின் நாட்பட்ட மாதிரிகள் பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் தோன்றுகின்றன. லூயிசு அமிலம் அவசியமாகின்ற பல வினைகளில் போரான் டிரைபுளோரைடுக்கு ஒரு மூலமாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது[1]. நான்முக போரான் டை எத்தில் ஈதர் ஈந்தணைவியுடன் ஒருங்கிணைந்திருப்பது போன்ற தோற்றத்தை இச்சேர்மம் அளிக்கிறது. மெத்தனால் அணைவு உள்ளிட்ட ஏராளமான வரிசைச் சேர்மங்கள் அறியப்படுகின்றன[2]

போரான் டிரைபுளோரைடு ஈதரேட்டு
இனங்காட்டிகள்
109-63-7
ChEMBL ChEMBL1710835
ChemSpider 17983029
InChI
  • InChI=1S/C4H10O.BF3/c1-3-5-4-2;2-1(3)4/h3-4H2,1-2H3;
    Key: KZMGYPLQYOPHEL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 517922
SMILES
  • B(F)(F)F.CCOCC
UNII 422VHH19IT
UN number 2604
பண்புகள்
C4H10BF3O
வாய்ப்பாட்டு எடை 141.93 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.15 கி செ.மீ–3
கொதிநிலை 126 °C (259 °F; 399 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

.

வினைகள் தொகு

வேதிச் சமநிலையின் வழியாக போரான் டிரை புளோரைடுக்கு ஓரு மூலமாக இச்சேர்மம் உதவுகிறது. BF3OEt2 BF3 + OEt2 BF3 வலிமை குறைந்த லூயிசு அமிலங்களைக்கூட பிணைக்கிறது. உருவாகும் கூட்டு விளைபொருள்கள் அணுக்கரு கவரிகளும் வினைபுரிவதை இது தூண்டுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Boron Trifluoride Etherate". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2007). John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rb249.pub2. 
  2. V. V. Saraev, P. B. Kraikivskii, I. Svoboda, A. S. Kuzakov, R. F. Jordan (2008). "Synthesis, Molecular Structure, and EPR Analysis of the Three-Coordinate Ni(I) Complex [Ni(PPh3)3][BF4]". J. Phys. Chem. A 112: 12449–12455. doi:10.1021/jp802462x.