போரான் பாசுபேட்டு

போரான் பாசுபேட்டு (Boron phosphate) என்பது BPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாசுபாரிக் அமிலத்துடன் போரிக் அமிலத்தை வினை புரியச் செய்வது போரான் பாசுபேட்டைத் தயாரிப்பதற்குரிய எளிமையான வழியாகும். வெண்மை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் 1450° செ வெப்பநிலைக்கு மேல் ஆவியாவதால் இதனை உருக்குவது இயலாது.[1]

போரான் பாசுபேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
போரான் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
13308-51-5
ChemSpider 20558515
InChI
  • InChI=1S/B.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
    Key: YZYDPPZYDIRSJT-UHFFFAOYSA-K
  • InChI=1/B.H3O4P/c;1-5(2,3)4/h;(H3,1,2,3,4)/q+3;/p-3
    Key: YZYDPPZYDIRSJT-DFZHHIFOAS
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16726750
  • [B+3].[O-]P(=O)([O-])[O-]
பண்புகள்
BPO4
வாய்ப்பாட்டு எடை 105.782 கி/மோல்
அடர்த்தி 2.52 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பாசுபாரிக் அமிலத்துடன் போரிக் அமிலத்தை 80 முதல் 1200 ° செ வெப்பநிலைக்கு சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் போரான் பாசுபேட்டு உருவாகிறது. இதனோடு தொடர்புடைய குளிரூட்டு முறையில் வெண்மையான படிகவடிவமில்லாத தூள் உருவாகிறது. இத்தூளை 1000 ° செ வெப்பநிலைக்கு இரண்டு மணிநேரம் சூடுபடுத்தினால் நுண்படிக விளைபொருளாக இச்சேர்மம் உருவாகிறது.[2]

இச்செயல்முறையின் பிரதான வினை:

H3BO3 + H3PO4 → BPO4 + 3 H2O

தற்காலத்தில், இவற்றைத் தவிர நீர்வெப்பத் தொகுப்பு முறைமற்றும் நுண்ணலைத் தொகுப்பு முறை போன்ற புதிய முறைகளும் போரான் பாசுபேட்டு தயாரிப்பதற்காக அறியப்பட்டுள்ளன[3] தொழிற்துறை பயன்பாடுகள் காரணமாக இதரத் தயாரிப்பு முறைகளும் போரான் பாசுபேட்டைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. :[3]

அமைப்பு

தொகு

அழுத்தத்தில் தயாரிக்கப்பட்ட போரான் பாசுபேட்டு எனில் இதன் சாதரண அமைப்பானது β- கிரித்தபாலைட்டுடன் சமவடிவம் கொண்டுள்ளது. உயர் அழுத்தத்தில் தயாரிக்கப்பட்டது எனில் அது α-குவார்ட்சு வடிவமைப்பிலும் காணப்படுகிறது.[4] α-குவார்ட்சு, AlPO4, பெரிலினைட்டு கனிமத்தின் படிக அமைப்புடன் சமவடிவப் படிகவமைப்புக் கொண்டுள்ளது.[1]

பயன்கள்

தொகு

கரிமத் தொகுப்பு வினைகளில் நீர்நீக்க வினை மற்றும் பிற வினைகளுக்கு இது வினையூக்கியாகச் செயல்படுகிறது. மேலும், உலோக பாசுபேட்டுகளைப் பெறுவதற்கான பரிமாற்ற வினைகளில் பாசுபேட்டு மூலமாகவும் போரான் பாசுபேட்டு பயன்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Corbridge DEC 2013, Phosphorus: Chemistry, Biochemistry and Technology, 6th ed., CRC Press, Boca Raton, Florida, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-4088-7
  2. Mylius, F.; Meusser, A. (1904). "Ueber die Bestimmung der Borsäure als Phosphat". Berichte der deutschen chemischen Gesellschaft 37: 397. doi:10.1002/cber.19040370171. 
  3. 3.0 3.1 Baykal, A, Kizilyalli, M, Toprak, Muhammet S. & Kniep, R (2001). "Hydrothermal and microwave synthesis of boron phosphate, BPO4". Turkish Journal of Chemistry 25 (4): 425–432. 
  4. MacKenzie, J. D.; Roth, W. L.; Wentorf, R. H. (1959). "New high pressure modifications of BPO4 and BAsO4". Acta Crystallographica 12: 79. doi:10.1107/S0365110X5900024X. 
  5. Moffat, J. B.; Goltz, H. L. (1965). "Surface Chemistry and Catalytic Properties of Boron Phosphate: 1. Surface Area and Acidity". Canadian Journal of Chemistry 43 (6): 1680. doi:10.1139/v65-222. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1965-06_43_6/page/1680. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_பாசுபேட்டு&oldid=3521125" இலிருந்து மீள்விக்கப்பட்டது