போரி ஆறு
போரி ஆறு (Bori River) இந்தியாவின் மகாராட்டிரா மற்றும் கருநாடகாவில் ஓடும் கிருஷ்ணா ஆற்றின் முக்கிய துணை ஆறான பீமா ஆற்றின் கிளை ஆறாகும். இது தாரூர் மலைகளுக்கு அருகிலுள்ள பாலாகாட் மலைத்தொடரிலிருந்து எழுகிறது. அக்கல்கோட் நோக்கி தெற்கு பாய்கிறது. இதன் போக்கில் அல்லது இதற்கு அருகிலுள்ள முக்கிய இடங்களில் துல்ஜாபூர் நகரம் மற்றும் இடைக்கால நல்பூர்க் கோட்டை ஆகியவை அடங்கும்.[1] போரி மற்றும் அர்னா ஆறு இணையும் இடத்தில் உள்ள கர்னூர் அணை அக்கல்கோட்டை சுற்றியுள்ள பகுதிக்குத் தண்ணீரை வழங்குகிறது.[2] இது மகாராட்டிரா-கருநாடகா எல்லையின் கருநாடகப் பகுதியில் உள்ள அப்சல்பூர் அருகே இடதுபுறத்தில் பீமாவைச் சந்திக்கிறது.