அக்கல்கோட்

அக்கல்கோட் (Akkalkot) About this soundpronunciation  இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் 21 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சியும் மற்றும் அக்கல்கோட் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும்.

அக்கல்கோட்
நகரம்
அக்கல்கோட் is located in மகாராட்டிரம்
அக்கல்கோட்
அக்கல்கோட்
மகாராட்டிரா மாநிலத்தில் அக்கல்க்கோட் நகரத்தின் அமைவிடம், இந்தியா
ஆள்கூறுகள்: 17°31′30″N 76°12′20″E / 17.52500°N 76.20556°E / 17.52500; 76.20556ஆள்கூறுகள்: 17°31′30″N 76°12′20″E / 17.52500°N 76.20556°E / 17.52500; 76.20556
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சோலாப்பூர் மாவட்டம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்40,103 [1]
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
 • வட்டார மொழிகன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்413216
வாகனப் பதிவுMH-13

இந்திய விடுதலைக்கு முன்னர் இந்நகரம் போன்சலே குலத்தினர் ஆண்ட அக்கல்கோட் இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது.

சோலாப்பூர் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கல்கோட் நகரம், மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையில்தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அக்கல்கோட் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 40,103 ஆகும். அதில் ஆண்கள் 20,051 ஆகவும்; பெண்கள் 20,052 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 5315 (13.25%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 76.09 % ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 84.58% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 67.70% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, பெண்கள் 929 வீதம் உள்ளனர்.

சமயம்தொகு

மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 68.63% ஆகவும்; இசுலாமியர்கள் 29.69% ஆகவும்; சீக்கியர்கள் 0.01% ஆகவும்; பௌத்தர்கள் 0.42% ஆகவும்; சமணர்கள் 1.05% ஆகவும், கிறித்தவர்கள் 0.04% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.14% ஆகவும் உள்ளனர். [2]

மொழிகள்தொகு

அக்கல்கோட் நகரத்தில் மராத்தி மொழி மற்றும் கன்னட மொழி பரவலாக பேசப்படுகிறது.

போக்குவரத்துதொகு

தொடருந்துகள்தொகு

இரண்டு நடைமேடைகள் கொண்ட அக்கல்கோட் தொடருந்து நிலையம் மும்பை, சென்னை, திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத், புவனேஸ்வரம், ராஜ்கோட் மற்றும் குண்டக்கல் போன்ற நகரங்களை இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது. [3]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கல்கோட்&oldid=2309280" இருந்து மீள்விக்கப்பட்டது