அக்கல்கோட் தாலுகா

அக்கல்கோட் தாலுகா (Akkalkot Taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தின் 11 தாலுகாக்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் அக்கல்கோட் ஆகும். இத்தாலுகா 7 குறுவட்டங்களையும், 3 நகரங்களையும், 138 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1413.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 222 பேர் வீதம் வாழ்கின்றனர். 79.76% மக்கள் கிராமபுறங்களில் வாழ்கின்றனர்.

அக்கல்கோட் தாலுகா
தாலுகா
மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல்கோட் தாலுகாவின் அமைவிடம்
மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் அக்கல்கோட் தாலுகாவின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சோலாப்பூர்
தலைமையிடம்அக்கல்கோட்
பரப்பளவு[1]
 • மொத்தம்1,413.97 km2 (545.94 sq mi)
மக்கள்தொகை (2011 census)[3]
 • மொத்தம்3,14,570 [2]
 • அடர்த்தி222/km2 (570/sq mi)
 • பாலின விகிதம்950 [3]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வருவாய் கிராமங்கள்138 [1]
குறுவட்டங்கள்7
சராசரி மழைப்பொழிவு643.6 mm

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 59974 வீடுகளைக் கொண்ட அக்கல்கோட் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 314570 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 161314 மற்றும் 153256 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 41,721 - 13.26% ஆகும். சராசரி எழுத்தறிவு 60.39% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 15.53% மற்றும் 3.26% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 82.83%, இசுலாமியர்கள் 16%, பௌத்தர்கள் 0.77%, சமணர்கள் 0.27%, கிறித்துவர்கள் 0.06% மற்றும் பிறர் 0.07% ஆக உள்ளனர்.[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Statistics" (PDF). solapur.gov.in.
  2. "Census statistics" (PDF). solapur.gov.in.
  3. 3.0 3.1 "Census statistics" (PDF). solapur.gov.in.
  4. Akkalkot Taluka Population Census 2011

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கல்கோட்_தாலுகா&oldid=3339877" இலிருந்து மீள்விக்கப்பட்டது