அக்கல்கோட் அரசு
அக்கல்கோட் அரசு (Akkalkot State) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. அக்கல்கோட் இராச்சியத்தை சத்ரபதி சிவாஜி பிறந்த மராத்திய போன்சலே வம்சத்தினர் 1708 முதல் 1948 முடிய ஆண்டனர். இவ்விராச்சியம் பம்பாய் மாகாணம் மற்றும் ஐதராபாத் இராச்சியத்தின் எல்லையில் தற்கால சோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்திருந்தது. இவ்விராச்சியத்தின் தலைநகரம் அக்கல்கோட் நகரம் ஆகும். [1]
அக்கல்கோட் இராச்சியம் அக்கல்கோட் அரசு अक्कलकोट राज्य | |||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | |||||
| |||||
கொடி | |||||
![]() | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1708 | |||
• | இந்திய ஒன்றியம் | 1948 | |||
பரப்பு | |||||
• | 1901 | 1,290 km2 (498 sq mi) | |||
Population | |||||
• | 1901 | 82,047 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 63.6 /km2 (164.7 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | சோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |

1290 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட அக்கல்கோட் இராச்சியத்தின், 1901ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 82,047 ஆகும். அக்கல்கோட் நகரத்தின் மக்கள் தொகை 8,348 ஆகும். இந்த இராச்சியத்தின் ஆண்டு வருவாய் ரூபாய் 26,586ல், ரூபாய் 1,000 பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தப்பட்டது.
வரலாறு தொகு
1708ல், போன்சலே வம்சத்தின் மராத்தியப் பேரரசர் சாகுஜியின் தத்துப் பிள்ளையான ரானோஜி போன்சலே என்பவரின் வழித்தோன்றல்கள் அக்கல்கோட் இராச்சியத்தை ஆண்டனர். பின்னர் சதாரா அரசிற்கு அடங்கிய சிற்றரசாக அக்கல்கோட் இராச்சியம் விளங்கியது. அக்கல்கோட் அரசு, 1848 முதல் பிரித்தானிய இந்தியா ஆட்சிக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1947 முடிய விளங்கியது. 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
அக்கல்கோட் ஆட்சியாளர்கள் தொகு
- 1712-1760 முதலாம் பாதேசிங் ராஜே போன்சலே (ரானோஜியின் மகன்)
- 1760-1789 முதலாம் சாகாஜி
- 1789-1822 இரண்டாம் பாதேசிங் ராஜே போன்சலே
- 1822-1823 முதலாம் மலோஜி (பாபா சாகிப்) ராஜே போன்சலே
- 1823-1857 இரண்டாம் சாகாஜி (அப்பா சாகிப்) ராஜே போன்சலே
- 1857-1870 இரண்டாம் மலோஜி (பூவா சாகிப்) ராஜே போன்சலே
- 1870-1896 மூன்றாம் சாகாஜி (பாபா சாகிப்) ராஜே போன்சலே
- 1896-1923 கேப்டன் மூன்றாம் பாதேசிங் ராஜே போன்சலே
- 1923-1952 விஜயசிங்ராவ் பாதேசிங்ராவ் மூன்றாம் ராஜே போன்சலே