போர்னிய பித்தேச்சிரோப்சு

போர்னிய பித்தேச்சிரோப்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பித்தெச்சிரோப்சு
இனம்:
பி. ஓதியன்
இருசொற் பெயரீடு
பித்தெச்சிரோப்சு ஓதியன்
(எம்மான்சு, 1993)

போர்னிய பித்தேச்சிரோப்சு (பித்தெச்சிரோப்சு ஓதியன்) என்பது போர்னியோவில் காணப்படும் ஒரு கொறிணி சிற்றினமாகும். இது பித்தேச்சிரோப்சு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். பித்தேச்சிரோப்சு என்பது பிதேச்சேயர் பேரினத்துடன் நெருங்கிய தொடர்புடையது. மேலும் இந்த பெயர் பெதேச்சேயர் எனும் சொல் கிரேக்க மொழியில் ops என்பதிலிருந்து பெறப்பட்டது, அதாவது "ஒத்து" எனப்பொருள்படும்.[2] இந்த பேரினத்தின் ஒரே சிற்றினம் வடக்கு போர்னியோவில் உள்ள சபாவில் உள்ள தானம் பள்ளத்தாக்கு கள மையத்தில் சுமார் 150 மீட்டர் உயரத்தில் பிடிபட்டது.[3]

விளக்கம்

தொகு

இது பிதேச்சேயர் பேரினத்தில் உள்ள இனங்களைப் போன்றது. நீளமான, அடர்த்தியான, மென்மையான உரோமங்கள் மற்றும் அகலமான பாதங்களைக் கொண்டுள்ளன. உட்புற காது எலும்புகள் மற்றும் செவிப்புலன் புல்லா ஆகியவற்றின் தோற்றத்தால் இவை பிதேச்சியர் பேரினத்திலிருந்து வேறுபடுகின்றன.[2]

வாழ்விடம்

தொகு

போர்னிய பித்தெச்சிரோப்சு சாலையோர அடர்த்தியான கொடிகளால் சூழப்பட்ட மரங்களில் காணப்படும். பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் தரவு குறைபாடுள்ள இனங்கள் எனக் பட்டியலிடுகிறது. ஏனெனில் இது பேரினத்தின் ஒரே ஒரு சிற்றினம் இதுவாகும். இந்த சிற்றினம் ஆபத்தில் உள்ளதா இல்லையா என்பதைக் குறிக்க இதன் எண்ணிக்கை அல்லது பரவல் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், இப்பகுதியில் காடுகளின் இழப்பு[3] மற்றும் மனித இடையூறுகள், சீரழிந்த வாழ்விடம் காணப்படுவதால், இந்த சிற்றினம் இத்தகைய இடத்தில் வாழக்கூடிய தகவமைப்பினை ஓரளவு பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Helgen, K.; Aplin, K.; Ruedas, L. (2008). "Pithecheirops otion". IUCN Red List of Threatened Species 2008. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T136834A4345146.en. https://www.iucnredlist.org/species/136834/4345146. 
  2. 2.0 2.1 Emmons, Louise H. (1993). "A new genus and species of rat from Borneo (Rodentia: Muridae)". Proceedings of the Biological Society of Washington 106 (4): 752–761. http://biostor.org/reference/65804. 
  3. 3.0 3.1 Musser, G.G. & Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Baltimore, Maryland: The Johns Hopkins University Press. pp. 894–1531. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.

வெளி இணைப்புகள்

தொகு