போர் சமஸ்தானம்

போர் சமஸ்தானம் (Bhor State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள போர் தாலுகாவின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போர் சமஸ்தானம் 2,396 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,37,268 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

போர் சமஸ்தானம்
भोर संस्थान
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
[[மராத்தியப் பேரரசு|]]
1697–1948

Flag of போர்

கொடி

Location of போர்
Location of போர்
1930-இல் பிரித்தானிய இந்தியாவின் போர் சமஸ்தானம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1697
 •  சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1948
Population
 •  1901 137,268 
தற்காலத்தில் அங்கம் போர் தாலுகா, புனே மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bhor". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

வரலாறு

தொகு

1697-ஆம் ஆண்டு முதல் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த போர் சமஸ்தானம்[1], மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற போர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. போர் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி போர் சமஸ்தானம் 1948-ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணத்தில் இணைக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, போர் சமஸ்தானம் பம்பாய் மாகாணத்தில் உள்ள புனே மாவட்டத்தின் போர் தாலுகாவில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian Princely States before 1947 A-J". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்_சமஸ்தானம்&oldid=3494246" இலிருந்து மீள்விக்கப்பட்டது