போர் தாலுகா
போர் தாலுகா (Bhor taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தின் 14 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] போர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் போர் நகரம் ஆகும். இத்தாலுகா போர் நகராட்சியும், 194 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2]
போர் தாலுகா | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் போர் தாலுகாவின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
வரலாறு
தொகுமராத்தியப் பேரரசில் 1627-ஆம் ஆண்டு முதல் போர் தாலுகாவின் பகுதிகள் போர் சமஸ்தானத்தில் இருந்தது. பின்னர் 1818-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி போர் சமஸ்தானப் பகுதிகள், புனே மாவட்டத்தின் போர் தாலுகாவில் இணைக்கப்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, போர் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 186,116 ஆகும். அதில் ஆண்கள் 94,158 மற்றும் 91,958 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 977 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 20,599 (11%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.42%. ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11,090 மற்றும் 5,414 ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 1,75,234 (94.15%), இசுலாமியர் 3,311 (1.78%), பௌத்தர்கள் 6,793 (3.65%) மற்றும் பிறர் 0.41% ஆகவுள்ளனர்.[3] இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.