போலா யாதவ்

இந்திய அரசியல்வாதி

போலா யாதவ் (பிறப்பு 18 செப்டம்பர் 1962) பீகாரைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகாரின் 16வது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பீகாரின் பகதுர்பூர் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். போலா யாதவ் இராட்டிரிய ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பகதூர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ஆர்ஜேடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்திய அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் இவர். பீகார் அரசியல் சூழ்நிலையில் ஆர்ஜேடி குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

போலா யாதவ்
Bhola Yadav
முதலமைச்சர் தனிச்செயலர்
பதவியில்
செப்டம்பர், 2000 – மார்ச், 2005
சிறப்பு பணி இந்திய இரயில்வே
பதவியில்
மார்ச், 2005 – மே, 2009
எதிர்க்கட்சித் தலைவர் தனிச்செயலர்
பதவியில்
சூன், 2009 – மார்ச், 2010
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
4 செப்டம்பர் 2014 – 21 நவம்பர் 2015
முன்னையவர்குலாம் கவுசு Gauss
தொகுதிதர்பங்கா
சட்டமன்ற உறுப்பினர் 2015
பதவியில்
நவம்பர், 2015 – நவம்பர், 2020
முன்னையவர்மதன் சகினி
தொகுதிபகதுர்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 செப்டம்பர் 1962 (1962-09-18) (அகவை 62)
தர்பங்கா, பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇராச்டிரிய ஜனதா தளம்
துணைவர்ஆஷா யாதவ்
பிள்ளைகள்02 மகள், 1 மகன்
வாழிடம்தர்பங்கா
இணையத்தளம்rjd.co.in/dev
As of 18 செப்டம்பர், 2019
மூலம்: [1]

வாழ்க்கை

தொகு

போலா யாதவ் பீகாரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் உள்ள கப்சாகி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சிறீ இராம் பிரகாசு யாதவ் மற்றும் இவரது தாயார் பெயர் இலக்பதி தேவி. மகத் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டதாரியான இவர், பாட்னாவுக்கு அருகிலுள்ள பதுஹாவில் உள்ள கல்லூரியில் கவுரவ ஆசிரியராக இருந்தார். ஆஷா யாதவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

அரசியல் பதவிகள்

தொகு
  • 2014–2015 - உறுப்பினர், பீகார் சட்ட மேலவை [1]
  • 2015–2020 - உறுப்பினர், பீகார் சட்டமன்றம் (பகததுர்பூர் தொகுதி)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலா_யாதவ்&oldid=3804412" இலிருந்து மீள்விக்கப்பட்டது