போலென்ஸ்கி மதிப்பு

போலென்ஸ்கி மதிப்பு (Polenske value) (போலென்ஸ்கி எண் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கொழுப்பை பரிசோதிக்கும் போது தீர்மானிக்கப்படும் ஒரு மதிப்பு ஆகும். மேலும், சவர்க்காரமாக்கல் (saponification) மூலம் ஆவியாகக்கூடிய கொழுப்பு அமிலத்தை எவ்வளவு பிரித்தெடுக்க முடியும் என்பதற்கான ஒரு குறிகாட்டி ஆகும். கொடுக்கப்பட்ட 5 கிராம் சவர்க்கார கொழுப்பிலிருந்து காய்ச்சி வடிகட்டிய நீரில் கரையாத ஆவியாகும் கொழுப்பு அமிலங்களை நடுநிலையாக்குவதற்குத் தேவையான 0.1 சாதாரண காரக் கரைசலின் மில்லிலிட்டர்களின் எண்ணிக்கைக்கு இது சமம். (இத்தகைய தரம் பார்த்தலில் பயன்படுத்தப்படும் ஐதராக்சைடு கரைசல் பொதுவாக சோடியம் ஐதராக்சைடு, பொட்டாசியம் ஐதராக்சைடு, பேரியம் ஐதராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.)[1]

இம்மதிப்பு, அதை உருவாக்கிய வேதியியலாளர் எட்வார்ட் போலென்ஸ்கி என்பவரின் பெயரில் அழைக்கப்படுகிறது.[2] ரெய்கெர்ட் மதிப்பு மற்றும் கிர்சினரின் மதிப்பு ஆகியவை ஒரேமாதிரி சோதனைகளின் அடிப்படையில் தொடர்புடைய எண்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலென்ஸ்கி_மதிப்பு&oldid=4052725" இலிருந்து மீள்விக்கப்பட்டது