போளூர் கோயில், கோழிக்கோடு
போளூர் கோயில், கோழிக்கோடு என்பதானது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரு காலத்தில் ஜாமோரின் தலைநகராக இருந்த இப்பகுதியின் பழமையான கோயில்களில் ஒன்றான சுப்பிரமணியர் கோயிலாகும். [1] இந்தக் கோயில் கோழிக்கோட்டிலிருந்து 12 கி.மீ.தொலைவிலும், பரம்பில் பஜார், முழிக்கல் ஆகிய இடங்களிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள குருவட்டூர் ஊராட்சியில் போளூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுபொரளத்திரி மன்னர் இந்த இடத்தின் ஆதிக்கம் செலுத்தியதால் இவ்வூர் இப்பெயரைப்பெற்றது. இக்கோயிலில் போளூரப்பன் எனப்டுகின்ற சுப்ரமணியர், கணபதி, வேட்டக்கொருமகன், அய்யப்பன், தேவி ஆகியோர் உள்ளனர். மூலவர் சுப்ரமணியசுவாமி மேற்கு நோக்கி தியான அல்லது எழுதுவது போன்ற நிலையில் உள்ளார்.
திருவிழாக்கள்
தொகுசுப்ரமணிய சுவாமி பிறந்த நாளான தைப்பூசத்தை மக்கள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இவ்விழா இக்கோயிலில் மகரம் மாதத்தில் நடைபெறுகின்ற முக்கியமான திருவிழாவாகும். கோயிலுக்கு வெளியில் ஒரு சர்ப்ப காவு உள்ளது. சர்ப்ப பூசை ஆண்டுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to Kerala window". பார்க்கப்பட்ட நாள் 2015-09-21.