போ. சுஜாதா தேவி
போ. சுஜாதா தேவி (B. Sujatha Devi)(1946 - 23 சூன் 2018) என்பவர் கேரளாவைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். இவர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியிலும், திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியிலும் ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றினார்.[1] 1999ஆம் ஆண்டில், கடுகலுடே தாளம் தேடி என்ற பயணக்கட்டுரைக்காக சிறந்த பயணக்கட்டுரைக்கான கேரள சாகித்திய அகாதமி விருதை வென்றார்.[2]
சுஜாதா தேவி Sujatha Devi | |
---|---|
பிறப்பு | போ. சுஜாதா தேவி 1946 |
இறப்பு | 23 சூன் 2018 திருவனந்தபுரம், இந்தியா |
தொழில் | எழுத்தாளர், சுற்றுச்சூழல் பேராசிரியர் |
மொழி | மலையாளம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கடுகலுதே தாளம் தேடி |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கேரள சாகித்திய அகதமி விருது-பயண இலக்கியம், 1999 |
பெற்றோர் | போதேசுவரன் (தந்தை) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசுஜாதா தேவி கவிஞரும் சுதந்திரப் போராட்ட வீரருமான போதேஸ்வரன் மற்றும் வி. கே. கார்த்யாயனி தம்பதியரின் மகள் ஆவார். கவிஞர்கள் மற்றும் ஆசிரியர்களான இருதய குமாரி மற்றும் சுகதகுமாரி ஆகியோரின் தங்கையும் ஆவார்.[3]
பணி
தொகுசுஜாதா தேவி திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் தனது ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பட்டாம்பி அரசு கல்லூரி, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி மற்றும் சாலக்குடி கல்லூரியில் பேராசிரியராகவும் ஆங்கில விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பெரும்பாலும் பயணக் கட்டுரைக்காக அறியப்பட்ட சுஜாதா தேவி ஒரு கவிஞரும் ஆவார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Correspondent, Special (2018-06-24). "Writer Sujatha Devi dead" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Thiruvananthapuram/writer-sujatha-devi-dead/article24244671.ece.
- ↑ "Poet, beloved professor Sujatha Devi, no more". The Times of India. 2018-06-24. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/poet-beloved-professor-sujatha-devi-no-more/articleshow/64714991.cms.
- ↑ "Poet and travel writer Sujatha Devi passes away in Thiruvananthapuram". The News Minute (in ஆங்கிலம்). 2018-06-23. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
- ↑ "Poet and travel writer Sujatha Devi passes away". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.