பௌலா கன் ஆலன்

அமெரிக்க எழுத்தாளர்

பௌலா கன் ஆலன் ( Paula Gunn Allen : அக்டோபர் 24, 1939 - மே 29, 2008) ஓர் அமெரிக்கக் கவிஞரும், இலக்கிய விமர்சகரும், ஆர்வலரும்,[1] பேராசிரியரும் மற்றும் புதின எழுத்தாளரும் ஆவார். கலப்பு-இனம் ஐரோப்பிய-அமெரிக்க, அரபு-அமெரிக்க மற்றும் பூர்வீக அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர் தனது தாய் வழி அமெரிக்க பழங்குடி மக்களான “லகுனா பியூப்லோ” என்ற பூர்வீக அமெரிக்கராக அடையாளம் காணப்பட்டார். கன் ஆலன் பூர்வீக அமெரிக்க மற்றும் பெண்ணிய கருப்பொருள்களுடன் ஏராளமான கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகள் மற்றும் பூர்வீக அமெரிக்க பெண்களின் இரண்டு சுயசரிதைகளை எழுதினார். பூர்வீக அமெரிக்க பாரம்பரியக் கதைகள் மற்றும் சமகால எழுத்துக்களின் நான்கு தொகுப்புகளை இவர் திருத்தி வெளியிட்டுள்ளார்.

பௌலா கன் ஆலன்
பிறப்புபௌலா மேரி பிரான்சிசு
அக்டோபர் 24, 1939
ஆல்புகெர்க்கி (நியூ மெக்சிகோ), அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புமே 29, 2008(2008-05-29) (அகவை 68)
போர்ட் பிராக், கலிபோர்னியா
தொழில்கவிஞர், புதின எழுத்தாளர்
தேசியம்லகுனா பியூப்லோ
கல்வி நிலையம்ஓரிகன் பல்கலைக்கழகம், நியூ மெக்சிகோ பல்கலைக்கழகம்
இலக்கிய இயக்கம்பூர்வீக அமெரிக்க மறுமலர்ச்சி

இலக்கியப் பணிகள்

தொகு

இவரது கவிதைகள் மற்றும் புனைகதைகளுடன் கூடுதலாக, 1986 ஆம் ஆண்டில் இவர் தி சேக்ரட் ஹூப்: ரிகவரிங் தி ஃபெமினைன் இன் அமெரிக்கன் இந்தியன் ட்ரெடிஷன்ஸ் [2] [3] என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில், ஐரோப்பியர்கள் ஆணாதிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது சொந்த சார்புகளின் காரணமாக, பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்களின் கணக்குகளில் பெண்களின் பங்கை வலியுறுத்தவில்லை என்று இவர் கூறினார்.[2]

மானுடவியல் எழுத்துக்கள்

தொகு

இவரது சொந்த அனுபவங்கள் மற்றும் பழங்குடி கலாச்சாரங்கள் பற்றிய தனது ஆய்வின் அடிப்படையில், பௌலா கன் ஆலன் தி சேக்ரட் ஹூப்: ரிகவரிங் தி ஃபெமினைன் இன் அமெரிக்கன் இந்தியன் ட்ரெடிஷன்ஸ் (1986) என்ற புத்தகத்தை எழுதினார். பீக்கன் பிரஸ் என்ற பதிப்பகம் இதை வெளியிட்டது. பூர்வீக அமெரிக்க சமூகங்களின் மேலாதிக்க கலாச்சார பார்வை ஒரு சார்புடையது என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் மற்றும் காலனித்துவவாதிகள் பூர்வீக மக்களை ஆணாதிக்க கண்ணோட்டம் மூலம் புரிந்து கொண்டனர் என்றும் புத்தகம் வாதிட்டது. பல பூர்வீக அமெரிக்க கலாச்சாரங்களில் பெண்கள் வகித்த முக்கிய பங்கை இவர் விவரித்தார். இதில் அரசியல் தலைமைப் பாத்திரங்களும் அடங்கும். இவை ஆண் ஆதிக்கம் செலுத்தும் ஐரோப்பிய கலாச்சாரங்களின் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களால் குறைத்து மதிப்பிடப்பட்டன அல்லது முற்றிலும் தவறவிடப்பட்டன. ஐரோப்பிய தொடர்புகளின் போது பெரும்பாலான பூர்வீக அமெரிக்கர்கள் தாய்வழி மரபு மற்றும் சமத்துவம் என்ற வாதத்தை ஆலன் முன்வைத்தார். ஒரு சிறிய சதவீதம் மட்டுமே ஐரோப்பிய ஆணாதிக்க முறையை பிரதிபலிக்கிறது.[2]

சொந்த வாழ்க்கை

தொகு

ஆலனின் தந்தை, ஈ. லீ. பிரான்சிசு, ஒரு லெபனான்-அமெரிக்கர் மற்றும் இவரது தாயார், இசுக்கொட்லாந்து-அமெரிக்கரும் மற்றும் லகுனா பியூப்லோவும் ஆவார். ஆலனின் சகோதரிகளில் ஒருவரான கரோல் லீ சான்செசு ஒரு லகுனா எழுத்தாளர் ஆவார். [4]

ஆலன் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு இரண்டு முறையும் விவாகரத்து செய்தார். [5] 1981-1986 வரை, இவர் அமெரிக்க கவிஞரும் எழுத்தாளருமான ஜூடி கிரானுடன் உறவில் வாழ்ந்தார்.[6]

நூல் பட்டியல்

தொகு
  • The Woman Who Owned The Shadows (1983), novel

மேற்கோள்கள்

தொகு
  1. Keating, AnnLouise (1993), "Myth Smashers, Myth Makers", in Nelson, Emmanuel Sampath (ed.), Critical Essays: Gay and Lesbian Writers of Color, Routledge, p. 73, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56023-048-7
  2. 2.0 2.1 2.2 Allen, Paula Gunn (1992). The Sacred Hoop: Recovering the Feminine in American Indian Traditions. Boston: Beacon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8070-4617-3.
  3. Karvar, Quannah (January 25, 1987). "The Sacred Hoop: RECOVERING THE FEMININE IN AMERICAN INDIAN TRADITION by Paula Gunn Allen". https://articles.latimes.com/1987-01-25/books/bk-5588_1_native-american. 
  4. McDaniel, Cynthia (1999). "Paula Gunn Allen: An Annotated Bibliography of Secondary Sources". Studies in American Indian Literatures 11 (2): 29–49. 
  5. "Archives - Los Angeles Times". Los Angeles Times. 7 June 2008.
  6. "Poet, Activist, Scholar". judy grahn official site. 2016. பார்க்கப்பட்ட நாள் 8 Aug 2023. From 1981-1986, Judy lived with the Native American critic, novelist, poet, and teacher, Paula Gunn Allen. The two of them held weekly Sunday morning meetings on subjects pertaining to women's spirituality at Mama Bears Coffeehouse and Bookstore on Telegraph Avenue in north Berkeley.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌலா_கன்_ஆலன்&oldid=3893379" இலிருந்து மீள்விக்கப்பட்டது