பௌவென் முடிச்சு


பௌவென் முடிச்சு என்பது உண்மையில் ஒரு உண்மையான முடிச்சு அல்ல. சில வேளைகளில் மரபுச் சின்ன வடிவமைப்புக்களில் பயன்படுத்தப்படும் ஒரு மரபுச்சின்னம் சார்ந்த முடிச்சு ஆகும். இது தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும். சதுர வடிவில் அமைந்த இதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தடம் அமைந்திருக்கும் (மேலுள்ள படம்). கயிறு உண்மையில் முடிச்சிடப்படாததால் இடவியலில் இது ஒரு முடிச்சிலி எனச் சொல்லப்படுகிறது.

பௌவென் முடிச்சு
Information
Family பௌவென் குடும்பம்
Region வேல்சு

கோண போவென் முடிச்சு என்பது வளைவான பக்கங்களைக் கொண்டிராத இதே போன்ற ஒரு முடிச்சு ஆகும். இது ஐந்து சதுரங்களினால் ஆன வடிவமாகத் தோற்றமளிக்கும்.

மூலங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌவென்_முடிச்சு&oldid=3609855" இலிருந்து மீள்விக்கப்பட்டது