ப்ரியா (திரைப்படம்)
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
ப்ரியா (Priya) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய ப்ரியா என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெறவில்லை.[1]
ப்ரியா | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பி. தமிழரசி (எஸ். பி. டி. பிலிம்ஸ்) |
கதை | சுஜாதா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஸ்ரீதேவி ரஜினிகாந்த் ஸ்ரீகாந்த் |
வெளியீடு | திசம்பர் 19, 1978 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஸ்ரீதேவி
- ரஜினிகாந்த்
- ஸ்ரீகாந்த்
- அம்பரீஷ்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் பஞ்சு அருணாசலம் இயற்றினார்.[2]
பாடல்கள் [2] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "ஏ பாடல் ஒன்று" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:32 | |||||||
2. | "அக்கரைச் சீமை அழகினிலே" | கே. ஜே. யேசுதாஸ் | 4:21 | |||||||
3. | "டார்லிங் டார்லிங்" | பி. சுசீலா | 4:39 | |||||||
4. | "என் உயிர் நீதானே" | கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி அந்தோனி | 4:51 | |||||||
5. | "சிறீராமனின் சிறீதேவி" | கே. ஜே. யேசுதாஸ் | 4:02 |