ப்ரோனீதா சுவர்கியாரி

ப்ரோனீதா சுவர்கியாரி, இந்தியாவின் அசாம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும், நடனக் கலைஞரும் நடன இயக்குனரும், இணையதள காணொளி கலைஞருமாவார். குடும்பமாக அஸ்ஸாமில் இருந்து குடிபெயர்ந்து தில்லியில் வசித்து வரும் இவர், ஜீ தொலைக்காட்சியில் வெளியான யதார்த்த நடன நிகழ்ச்சியான டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் ஐந்தின் வெற்றியாளர் ஆவார். [1] [2]

ப்ரோனீதா சுவர்கியாரி
ப்ரோனீதா சுவர்கியாரியின் புகைப்பட படைப்பு
பிறப்பு23 ஜூன் 1996
அசாம்
தேசியம்இந்தியர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2015 ஆம் ஆண்டு முதல்
அறியப்படுவதுடான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் ஐந்தின் வெற்றியாளர்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ப்ரோனீதா சுவர்கியாரி, அசாமில் உள்ள பக்சா போடோலாந்து பிராந்தியப் பகுதியைச் சேர்ந்தவர். இவரது குழந்தை பருவத்திலிருந்தே நடனத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அதற்காக நாட்டுப்புற, பாரம்பரிய மற்றும் மேற்கத்திய என எல்லா நடன வடிவங்களிலும் தொழில்ரீதியாகப் பயிற்சிகளை முறையாக பெற்றுள்ளார். முதன்முதலாக 2009 ஆம் ஆண்டில், அவரது பதினைந்தாவது வயதிலேயே உள்ளூர் பிஹு விழாவில் நடனமாடி, தொழில்முறை நடனத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு தொழில்முறை நடனப் பயிற்சிக்காக டெல்லியில் உள்ள டான்ஸ் ஒர்க்ஸ் அகாடமியில் சேர்ந்து கதக் நடனத்தின் அடிப்படைகளையும் சூட்சுமங்களையும் காற்றுள்ள இவர், குருகிராமில் உள்ள கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸில் நடனக் கலைஞராக பணியாற்றியுள்ளார். டான்ஸ் இந்தியா டான்ஸ் பாகம் இரண்டில் போட்டியிட்டு தோல்வியைப் பெற்று வெளியேற்றப்பட்ட ப்ரோனீதா, அதற்காக மனம்வருந்தாமல், மேலும் தனது நடனத்திறமையை மேம்படுத்தி, நடனக் கலைஞரான புனித் ஜெயேஷ் பதக்கின் புனிட் கே பாந்தர்ஸ் (புனித்தின் சிறுத்தைகள்) என்ற நடனக்குழுவின் மூலமாக, டான்ஸ் இந்தியா டான்ஸ் ஐந்தாவது பாகத்தில் முதலிடம் பிடித்து வெற்றிவாகை சூடியுள்ளார். நடனத்தின் மீது அவருக்கு இருந்த பற்றும் ஆர்வமுமே இந்த வெற்றியை பெற்றுத்தந்தாக கூறியுள்ள இவர், "ஹோடோ பே பாஸ் தேரா நாம் ஹை" என்ற திரைப்படம் மூலம் திரையுலகிலும் அறிமுகம் கிடைத்துள்ளது.

23 ஜூன் 1996 அன்று பிறந்துள்ள இவர், 2016 ஆம் ஆண்டில் ''பாஞ்சோ'' என்ற படத்திலும் நடித்துள்ளார். நடிகை மாதுரி திட்சித்தை தனது முன்மாதிரியாக கொண்டுள்ள இவர், தன்னைப்போல ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நடனக்கலையை கற்றுக்கொடுப்பதிலும், நாட்டிய நிகழ்ச்சிகளை வடிவமைத்து, சிறந்த நடன அமைப்பாளராகவும், இயக்குனராகவும் வேண்டுமெனெ கனவுகளைக் கொண்டுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Proneeta Swargiary from New Delhi is the Winner of DID Season 5!". India Today. 10 October 2015. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
  2. "Delhi resident Assamese performer". Archived from the original on 25 October 2017. பார்க்கப்பட்ட நாள் 13 December 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப்ரோனீதா_சுவர்கியாரி&oldid=3679209" இலிருந்து மீள்விக்கப்பட்டது