மகந்த் தர்சன் தாஸ் மகிளா கல்லூரி

மகந்த் தர்சன் தாஸ் மகிளா கல்லூரி (Mahant Darshan Das Mahila College) என்பது இந்தியாவின் பிகார் மாநிலத்தில் முசாபர்பூர் மாவட்டதில் 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிருக்காக இயங்கும் கல்வியியல் மற்றும் இளங்கலைக் கல்லூரியாகும். பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள[1] இக்கல்லூரி, பெண் மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டு பயிற்றுவிக்கிறது. கலை, கல்வி, அறிவியல், வணிகம், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

மகந்த் தர்சன் தாஸ் மகிளா கல்லூரி
வகைஇளங்கலை மற்றும் கல்வியியல் மகளிர் கல்லூரி
உருவாக்கம்1946 (78 ஆண்டுகளுக்கு முன்னர்) (1946)
சார்புபாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்
முதல்வர்முனைவர் கனுப்ரியா
அமைவிடம்
கிளப் சாலை, மிதன்புரா
, , ,
842002
,
இணையதளம்கல்லூரி இணையதளம்

வரலாறு

தொகு

இக்கல்லூரி 15 ஆகஸ்ட் 1946 அன்று சாப்மேன் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் பெண்களுக்கு கல்வி கற்பதுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளது.

நிறுவனர்கள் [2]

தொகு
  • ராய் பகதூர் ஸ்ரீ நாராயண் மஹதா
  • ராய் பகதூர் உமா சங்கர் பி.டி.
  • ஸ்ரீ ஹரிசதன் பாதுரி
  • டாக்டர் ஜேகே சர்க்கார்
  • ராய் பகதூர் வீரேஷ்வர் சட்டர்ஜி
  • ஸ்ரீ அதுலானந்த் சென்
  • ஸ்ரீ மகேஷ் பி.டி. சிங்
  • மஹந்த் தர்ஷன் தாஸ்

அங்கீகாரம்

தொகு

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் கல்வியியல் படிப்புகளோடு பல்வேறு பட்டயப்படிப்புகளும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'பி' தரமளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

துறைகள்

தொகு

கல்வியியல் பிரிவு

தொகு

இளங்கலைக் கல்வி

அறிவியல் பிரிவு

தொகு
  • தாவரவியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • விலங்கியல்

கலைப்பிரிவு

தொகு
  • பெங்காலி
  • பொருளாதாரம்
  • ஆங்கிலம்
  • இந்தி
  • வரலாறு
  • தத்துவம்
  • அரசியல் அறிவியல்
  • சமஸ்கிருதம்
  • உருது

வணிக மேலாண்மை

தொகு
  • இளங்கலை வணிக மேலாண்மை (பிபிஏ)
  • இளங்கலை கணினி அறிவியல்(பிசிஏ)

இவற்றோடு முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களும் இக்கல்லூரியில் உள்ளது.


குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு

நுதன் தாக்கூர் - லக்னோவைச் சேர்ந்த அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்

மேற்கோள்கள்

தொகு
  1. "பி.எட். கல்லூரிகள் பட்டியல்".
  2. "History | Mahant Darshan Das Mahila College, Muzaffarpur". பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.