மகம்மது முரத்லி

அசர்பைசான் நாட்டு சதுரங்க வீரர்

மகம்மது முரத்லி (Məhəmməd Muradlı) அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பு 2022 ஆம் ஆண்டு மகம்மது முரத்லிக்கு கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியது. அசர்பைசான் நாட்டின் தேசிய வெற்றியாளராக மகம்மது முரத்லி இரண்டு முறை இருந்திருக்கிறார்.[1]

மகம்மது முரத்லி
Mahammad Muradli
2016 ஆம் ஆண்டில் முகம்மது முராத்லி
நாடுஅசர்பைசான்
பிறப்புஆகத்து 1, 2003 (2003-08-01) (அகவை 20)
பக்கூ, அசர்பைசான்
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2022)
பிடே தரவுகோள்2503 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2555 (செப்டம்பர் 2022)

சதுரங்க வாழ்க்கை தொகு

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் சதுரங்கப் போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மகம்மது முரத்லி வென்றார். [2]

சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் அசர்பைசான் நாட்டின் அணி மூன்றில் இவர் விளையாடினார்:

2019 ஆம் ஆண்டில் முரத்லி உலக இளைஞர் சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் அசர்பைசான் அணிக்காக விளையாடினார். அந்த அணி அந்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றியாளராகியது.[4]

2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முரத்லி அசர்பைசான் நாட்டு வெற்றியாளராகத் திகழ்ந்தார், [5] [6]

2022 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் முரத்லி 2022 பைல் சதுரங்கத் திருவிழாவில் 7/9 புள்ளிகள் எடுத்து 2726 எலோ தரப்புள்ளிகளை ஈட்டினார்.[7] 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக்கோப்பை போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Muradli, Mahammad". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-07.
  2. "World Youth Ch 2015 - Open under 12". chess-results.com.
  3. "Chess-Results Server Chess-results.com - 42nd Olympiad Baku 2016 Open". chess-results.com.
  4. "World Youth Chess Olympiad 2019". chess-results.com.
  5. "Azerbaijan Chess Championship 2019-Men". chess-results.com.
  6. "Azerbaijan Championship Final 2022". chess.com.
  7. "Master Tournament (MTO) Biel International Chess Festival 2022". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 23 July 2022.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகம்மது_முரத்லி&oldid=3780658" இலிருந்து மீள்விக்கப்பட்டது