மகரிஷி (எழுத்தாளர்)

மகரிஷி என்ற புனைபெயரைக் கொண்ட பாலசுப்பிரமணி ஐயர் தமிழக எழுத்தாளர் ஆவர்.

மகரிஷியின் பிறந்த ஊர் தஞ்சாவூர். சேலத்தில் வசித்தவர். இவர் தமிழ்நாடு மின்சார வாரியம் நிறுவனத்தில் பணியாற்றினார்.

மகரிஷி என்ற பெயரில் இவர் கிட்டத்தட்ட 130 புதினங்கள், 5 சிறுக்கதைத் தொகுப்புகள், 60 கட்டுரை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் முதலாவது புதினம் "பனிமலை" ஆகும். இதன் கதை 1965 இல் "என்னதான் முடிவு" என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இவரது ஏனைய கதைகள் பத்ரகாளி (1977), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978), மற்றும் நதியை தேடி வந்த கடல் (1980) ஆகிய திரைப்படங்களாக வெளிவந்தன.[1][2][3]

படைப்புகள்

தொகு

நெடுங்கதைகள்

தொகு
  1. சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
  2. நதியைத் தேடிவந்த கடல்
  3. பத்ரகாளி
  4. பனிமலை
  5. புவனா ஒரு கேள்விக்குறி
  6. வட்டத்துக்குள் சதுரம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரிஷி_(எழுத்தாளர்)&oldid=3686003" இலிருந்து மீள்விக்கப்பட்டது