மகர ஒளி
மகர ஜோதி (Makara Jyothi) வானத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 14 ல் மாலை 6.30 மணி அளவில் மகர சங்கராந்தி எனக்கூறப்படும் நாளன்று தோன்றும் நட்சத்திரம்.[1] கேரளா மாநிலத்தில் சபரிமலைக்கு நேர் எதிரே கண்டமாலா மலை முகட்டில் இது தோன்றுவதாக ஆதாரமற்ற செய்தியாக சொல்லப்படுகிறது. இந்த நட்சத்திரத்தைக் காண வழிபாட்டாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் 41 நாட்கள் நோன்பிருந்து சபரிமலை செல்கின்றனர். இது குறித்து பல சர்ச்சைகள், பல்வேறு கருத்துக்கள் உள்ளன. தற்பொழுது இந்த நட்சத்திரம் தெரிவதில்லையென்றும் தற்பொழுது தெரிவது மகரவிளக்கு என்றும் கூறுகின்றனர். அது மட்டுமில்லாமல் இது குறித்து சில மூடநம்பிக்கை கருத்துக்களும் நிலவுகின்றன.
உண்மையில் தெரிவது
தொகுசபரிமலைக்கு எதிரே உள்ள கொச்சுபம்பா என்னும் ஊரின் அருகே உள்ள பொன்னம்பலமேடு என்னும் மலைப்பகுதியில் மனிதர்களைக் கொண்டு[2] கற்பூரங்களால் கொளுத்தப்படும் தீபமே மகரஜோதியாக தெரிகிறது என்று கூறுகின்றனர். இவை மூன்று முறை ஈரசாக்குப்பைகளால் அணைக்கப்பட்டு மீண்டும் எரியவைத்துக் காட்டப்படுகிறது. இப்பணியிணை மேற்கொள்பவர்கள் கேரள மின்துறை ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது. இம்மலையின் அருகில்தான் கொச்சுபம்பா மின்னேற்று நிலையம் உள்ளது. இங்கு கொச்சுபம்பா அணையிலிருந்து நீர்மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வழியாகத்தான் பொன்னம்பலமேட்டிற்கு செல்லவேண்டும். இவ்விடம் கேரள வனத்துறையினர் மற்றும் கேரள காவல்துறையினரால் அந்நியர்கள் பிரவேசிக்கா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அறநிலையத்துறை ஒப்புதல்
தொகுமனிதர்களால் பொன்னம்பலமேட்டில் கற்பூரத்தை எரியவைத்து சபரிமலை வழிபாட்டாளர்களுக்கு தீபமாக காட்டப்படுவதை கேரள அறநிலையத்துறை அமைச்சகமும்[3] ஒப்புக்கொண்டுள்ளது. இது மகர ஜோதியல்ல மனிதர்களால் எரியவைத்து ஏற்றிக் காட்டப்படும் கற்பூரதீபமே எனக் கூறுகின்றனர். இதையே மக்கள் மகரஜோதியாக நினைத்து வழிபடுகின்றனர். ஆனால் இது கேரள மாநிலத்தில் உள்ள பலருக்குத் தெரியும் எனவும் கூறப்படுகிறது. ஒரு சில வழிபாட்டாளர்களால் மட்டுமே இது தவறுதலாக புரிந்து கொள்ளப்படுகிறது எனக் கேரள தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர். பொன்னம்பலமேட்டில் பண்டைய காலத்தில் கோவில் இருந்ததால் அவ்விடத்தில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது இதுவே மகரஜோதியாக ஒவ்வோரு வருடமும் ஜனவரி 14 அன்று சபரிமலையில் தெரிகிறது. சபரிமலை குறித்த நிறைய சர்ச்சைகள் வழக்குகளாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகளின் விசாரனையின் போது கேரள உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், இது மனிதர்களால் ஏற்றப்படுவது என கேரள அறநிலையத்துறையும்[4] கோவில் நிருவாகமும்[5] ஒப்புக்கொண்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி மனிதர்களால் தான் ஏற்றப்படுகிறது என்று கேரளமாநில உயர்நீதிமன்றத்தில் திருவாங்கூர் தேவசம்போர்டு உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்துள்ளது.[6]
விபத்துக்கள்
தொகு
- 1999 ம் ஆண்டு ஜனவரி 14 ந் தேதி ஜோதியின் நெரிசலில் சிக்கி 25 வழிபாட்டாளர்கள் மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தனர். 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- 2011, சனவரி 14 இரவு சபரிமலையில் தரிசனத்தை முடித்துக்கொண்டு மகரஜோதியை காண்பதற்காக அருகிலுள்ள புல்மேட்டிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அப்போது இடம்பெற்ற விபத்து ஒன்றை அடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் உயிரிழந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Makara Jyothi". en:Makara Jyothi. அணுகப்பட்டது 2009-02-24.
- ↑ தெரிவது]] "NDTV-Nothing Divine about Sabarimala Light". Archived from the original on 2008-06-01. பார்க்கப்பட்ட நாள் 2009-02-23.
{{cite web}}
:|first=
missing|last=
(help); Check|archiveurl=
value (help) - ↑ தெரிவது]] "NDTV-Nothing Divine about Sabarimala Light". You Tube Vedio. Archived from the original on 2014-04-15. பார்க்கப்பட்ட நாள் 2009-02-23.
{{cite web}}
:|first=
missing|last=
(help); Check|archiveurl=
value (help)CS1 maint: unfit URL (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2011-02-18.
- ↑ [1]
- ↑ "மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது: திருவாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2011-04-26.