மகாகவி பாரதி நினைவு நூலகம்

மகாகவி பாரதி நினைவு நூலகம்  என்பது தமிழ்நாட்டின் ஈரோடு நகரின்  கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு பொது நூலகம் ஆகும். தமிழ்நாட்டுப் புரட்சிக் கவிஞர் பாரதியாரின் நினைவாக இந்நூலகத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது. கருங்கல்பாளையம் நூலகம் எனவும்  இது பொதுவாக அறியப்படுகிறது.

வரலாறுதொகு

முன்னதாக, ஓர் அறையாகக் காணப்பட்ட இந்நூலகத்தை உள்ளூர் மக்கள் கருங்கல்பாளையம் வாசிப்பு அறை என அழைத்தனர். பின்னர், சுப்பிரமணிய பாரதி  1921 ஆம் ஆண்டு இவ்வாசிப்பு அறைக்கு வருகை தரவே மகாகவி பாரதி நூலகம் என இது பெயர் மாற்றம் பெற்றது.[1] பின்னர் பாரதி இறந்ததினால் பாரதி நினைவு நூலகமாக மாற்றம் கண்டு வளர்ச்சி அடைந்து வந்தது.

பாரதியாரின் வருகைதொகு

1921 ஜூலை 31 அன்று மனிதன் அழியான் எனும் தலைப்பில் உரை ஒன்றை ஆற்றுவதற்காக கருங்கல்பாளையம் வாசிப்பு அறைக்கு பாரதியார் வருகை தந்தார். ஒரு சில வாரங்கள் கழித்து அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். கருங்கல்பாளையத்தில் ஆற்றிய உரையே அவரது கடைசி பொது உரையாக இருந்தது.[2]

சேமிப்புகள்தொகு

பின்னர், ஈரோடு நிர்வாகம் இந்நூலகத்தைப் புதுப்பித்து, பாரதியாரின் ஒவ்வொரு ஆக்கங்களையும் சேகரித்தது. பாரதியார் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், மற்றும் அவர் பொதுக்கூட்டங்களில் தேசிய விடுதலை, பெண் சுதந்திரம் பற்றி ஆற்றிய உரைகள், அவரது ஓவியங்கள்  போன்றவற்றை இந்நூலகம் தன்னகத்தே வைத்திருக்கின்றது. மேலும், பாரதியார் " சுதேசமித்திரன்  " எனும் தினப்பத்திரிகைக்கு எழுதிய ஆக்கங்கள் அனைத்தையும் இந்நூலகத்தில் காணலாம்[3]

அருங்காட்சியகம்தொகு

நுலகக் கட்டிடத்திற்கு அப்பால் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஓர் அருங்காட்சியகத்தையும் இந்நூலகம் கொண்டுள்ளது. இங்கு பாரதியார் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான அனைத்து விடயங்களையும் காணலாம்.

மேற்கோள்கள்தொகு