மகாத்மா அய்யங்காளி மண்டபம்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் நகர அரங்கம்

மகாத்மா அய்யங்காளி மண்டபம் (Mahatma Ayyankali Hall) இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்த நகர அரங்கம் முன்னதாக வி.ஜே.டி மண்டபம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1896 ஆம் ஆண்டில் அப்போதைய இங்கிலாந்து ராணியாக இருந்த விக்டோரியா மகாராணியின் முடிசூட்டு விழாவின் 50 ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், பிரித்தானியப் பேரரசின் அப்போதைய திருவாங்கூர் மன்னராக இருந்த சிறீ மூலம் திருனல் ராம வர்மாவுக்கு [1] இம்மண்டபம் பரிசாக வழங்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் மகாத்மா அய்யங்காளி மண்டபம்

சமூக சீர்திருத்தவாதியான அய்யங்காளியை கௌரவிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் தற்போதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் [2] வி.ஜே.டி மண்டபத்தை மறுபெயரிட்டு அழைத்தார். அய்யங்காளியை கௌரவிப்பதற்கு இதைவிட மிகவும் பொருத்தமான வேறுவழிகள் இருக்கின்றன என்று நினைத்த சில வரலாற்றாசிரியர்கள் விமர்சனங்கள் முன்வைத்தனர். சன்னி கபிகாட்டு போன்ற தலித் ஆர்வலர்கள், மண்டபத்தின் மறுபெயரிடுதலை ஆதரித்தனர். ஏனெனில் அய்யங்காளி அதுவரையில் மரியாதைக்குரிய வகையில் கௌரவிக்கப்படவில்லை என்றும், மண்டபத்தின் பெயரை மாற்றுவது அய்யங்காளி மற்றும் ஒட்டுமொத்த தலித் சமூகத்திற்கும் உரிய மரியாதையை அளிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இன்று, இந்த மண்டபம் அதன் கட்டடக்கலை மற்றும் கலாச்சார செழுமையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது மற்றும் திருவனந்தபுரத்தில் கண்காட்சிகள் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கான மிகவும் விரும்பப்படும் மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. [3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
  2. https://www.thenewsminute.com/article/vjt-hall-thiruvananthapuram-be-renamed-after-social-reformer-ayyankali-108012
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.