மகாத்மா காந்தி பூங்கா

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு பூங்கா

மகாத்மா காந்தி பூங்கா (Mahatma Gandhi Park) இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் கொல்லம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பொதுப் பூங்கா ஆகும். உலகின் முந்திரி தலைநகர் எனப்படும் சின்னக்கடையிலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொல்லம் நகரின் முக்கிய பொழுதுபோக்கு மையங்களில் இப்பூங்காவும் ஒன்றாகும். [1] கொல்லம் மாநகராட்சி ஆணையத்திற்குச் சொந்தமான இந்தப் பூங்காவை, கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் என்ற தனியார் நிறுவனம், பராமரிப்புக்காக ஐந்தாண்டு கால ஒப்பந்தத்தில் நடத்துகிறது. [2] 'தி குயிலான் பீச்' என்ற ஐந்து நட்சத்திர விடுதி இந்த பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. [3]

மகாத்மா காந்தி பூங்கா
Mahatma Gandhi Park
மகாத்மா காந்தி பூங்கா, கொல்லம்
மகாத்மா காந்தி பூங்கா நுழைவாயில்
Map
வகைபொதுப் பூங்கா
அமைவிடம்Near கொல்லம் கடற்கரை
அண்மைய நகரம்கொல்லம், இந்தியா
ஆள்கூறு8°52′29″N 76°35′36″E / 8.874601°N 76.593326°E / 8.874601; 76.593326
திறப்பு1 சனவரி 1967 (1967 -01-01)
நிலைஆண்டு முழுவதும்
பொதுப் போக்குவரத்துபேருந்து நிலையம் Bus interchange - 3.0 km,
கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் Mainline rail interchange - 2.3 km,
கொல்லம் படகுத்துறை ferry/water interchange - 3.0 km
சாலைகடற்கரை சாலை
பூங்காவின் உள்ளே மகாத்மா காந்தி சிலை.

வரலாறு

தொகு

மகாத்மா காந்தி பூங்கா 1 ஜனவரி 1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று அப்போதைய இந்திய துணை குடியரசுத் தலைவர் சாகீர் உசேனால் திறக்கப்பட்டது. அப்போது மான் பூங்காவும் மீன்வளம் கொண்ட பூங்கா வளாகமும் அங்கு இருந்தன. ஆனால் சமூக விரோதிகளின் தொல்லைகளால் மூடப்பட்டது. பின்னர் 2010 ஆம் ஆண்டில், கொல்லம் நகராட்சி ஆணையம் இந்த பூங்காவை சீரமைக்க பணம் ஒதுக்கியது. புதுப்பிக்கப்பட்ட பூங்காவை அப்போதைய கொல்லம் மேயர் பிரசன்னா எர்னசுட்டு திறந்து வைத்தார், கொல்லத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்கா 2017 ஆம் ஆண்டில் பூங்காவின் பொன்விழாவைக் கொண்டாடியது.

வசதிகள்

தொகு
  • நீச்சல் குளம்
  • கண்காணிப்பகம்
  • பந்துவீச்சு இயந்திரம்
  • இனிப்பு கடைகள் & சிற்றுண்டிச்சாலை
  • நீர் நீரூற்றுகள்
  • செயற்கை நீர்வீழ்ச்சிகள் [4]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kollam district - Official Website". Kollam District. Archived from the original on 5 May 2017. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  2. "City Development Plan for Kollam, 2041" (PDF). Kollam Municipal Corporation. Archived from the original (PDF) on 29 December 2014. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
  3. "The Beach Orchid wins Management Association Award". Express TravelWorld. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Mayor to inaugurate spruced up MG Park". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாத்மா_காந்தி_பூங்கா&oldid=4108519" இலிருந்து மீள்விக்கப்பட்டது