மகாராணா பூபால் விளையாட்டரங்கம்

இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள விளையாட்டரங்கம்

மகாராணா பூபால் விளையாட்டரங்கம் (Maharana Bhupal Stadium) இந்தியாவின் இராசத்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ளது. பல்நோக்கு விளையாட்டு அரங்கமான இங்கு கால்பந்து , துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.[1][2] 1982 ஆம் ஆண்டு இராசத்தான் துடுப்பாட்ட அணி உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடியபோது[3] இங்கு இரண்டு ரஞ்சிக் கோப்பை போட்டிகள் நடைபெற்றன.[4] பின்னர் 1983 ஆம் ஆண்டு விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிராக இராசத்தான் துடுப்பாட்ட அணி விளையாடியபோது ஒரே ஒரு ரஞ்சிக் கோப்பை போட்டி இங்கு நடைபெற்றது.[5][6] அப்போது முதல் இங்கு முதல் தரமல்லாத இதர துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மகாராணா பூபால் விளையாட்டரங்கம்
Maharana Bhupal Stadium
முழு பெயர் மகாராணா பூபால் சிங் விளையாட்டரங்கம்
இடம் உதயப்பூர், ராஜஸ்தான்
எழும்பச்செயல் ஆரம்பம் 1982
திறவு 1982
உரிமையாளர் இராசத்தான் மாநில விளையாட்டுக் கழகம்
ஆளுனர் இராசத்தான் மாநில விளையாட்டுக் கழகம்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 10,000

மேற்கோள்கள்

தொகு
  1. Rajasthanonline
  2. Udaipur Explorer பரணிடப்பட்டது 9 நவம்பர் 2015 at the வந்தவழி இயந்திரம்
  3. Scorecard
  4. First-class matches
  5. Scorecard
  6. "UDAIPUR IN 2020 EDUCATION GENERAL: By Ashok Mathur". thetimesofudaipur.com. The Times Of Udaipur. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.