மகாராணி காசிசுவரி கல்லூரி

மகாராணி காசிசுவரி கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் 1964 [1] ஆண்டில் நிறுவப்பட்ட இளங்கலை மகளிர் கல்லூரியாகும். அறிவியல், கலை மற்றும் வணிகம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2].

மகாராணி காசிசுவரி கல்லூரி
படிமம்:Maharani Kasiswari College.webp
வகைஇளங்கலைக் கல்லூரி
உருவாக்கம்1964; 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1964)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்பேராசிரியர் சௌகதா ரே
முதல்வர்முனைவர். சிமா சக்ரபர்த்தி
செயலாளர்முனைவர் சிமா சக்கரபாணி
அமைவிடம்
20, ரமாகாந்தா போஸ் தெரு, பிதான் சரணி , சாம்பசார்
, , ,
700003
,
22°36′05″N 88°22′13″E / 22.6012661°N 88.37015°E / 22.6012661; 88.37015
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்மகாராணி காசிசுவரி கல்லூரி இணையதளம்
மகாராணி காசிசுவரி கல்லூரி is located in கொல்கத்தா
மகாராணி காசிசுவரி கல்லூரி
Location in கொல்கத்தா
மகாராணி காசிசுவரி கல்லூரி is located in இந்தியா
மகாராணி காசிசுவரி கல்லூரி
மகாராணி காசிசுவரி கல்லூரி (இந்தியா)

இக்கல்லூரியானது, மகாராஜா மணீந்திர சந்திரா கல்லூரி (பகல்நேரக் கல்லூரி) மற்றும் மகாராஜா ஸ்ரீசந்திர கல்லூரி (மாலைநேரக் கல்லூரி) ஆகியவற்றுடன் வளாகத்தைப் பகிர்ந்து கொண்டுவருகிறது.

வரலாறு

தொகு

முர்ஷிதாபாத் கோசிம்பஜார் அரச குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக கல்விக்கு அளித்துள்ள பங்களிப்பின் ஒரு பகுதியான இக்கல்லூரி, ஆரம்பத்தில் 1941 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி நிறுவப்பட்ட மகாராஜா மணீந்திர சந்திரா கல்லூரியின் ஒரு பகுதியாகவே இருந்தது. மகாராஜா மணீந்திர நந்தியின் பரம்பரைச் சொத்தாக இருந்த அரண்மனைகளும், சொத்துக்களுமே இந்த கல்லூரிகளைத் தொடங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஜா மணீந்திர சந்திராவின் மனைவியும் பர்த்வானின் மகாராணியுமான காசிசுவரியின் நினைவாக 1964 ஆம் ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, மணீந்திர சந்திரா கல்லூரி மூன்று தனித்தனி பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டபோது, ​​​​பெண்களுக்கான கல்லூரியாக இந்த மகாராணி காசிசுவரி கல்லூரி நிறுவப்பட்டு 2 டிசம்பர், 1964 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

அங்கீகாரம்

தொகு

மகாராணி காசிசுவரி கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [1] மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) பி தரம் பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த தரமதிப்பீடு காலாவதியாகிவிட்டது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Colleges in West Bengal, University Grants Commission
  2. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.
  3. "Institutions Accredited/ Re-accredited by NAAC whose accreditation validity period is over" இம் மூலத்தில் இருந்து 2012-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512054834/http://www.naac.gov.in/sites/naac.gov.in/files/Validity_expired_institutions.pdf. 

வெளி இணைப்புகள்

தொகு