மகாலங்கூர் இமால்

வடகிழக்கு நேபாளம் மற்றும் தென் மத்திய திபெத்தில் உள்ள இமயமலையின் பகுதி

மகாலங்கூர் இமால் (Mahālangūr Himāl) என்பது வடகிழக்கு நேபாளம் மற்றும் சீனாவின் தெற்கு மத்திய திபெத் ஆகிய பகுதிகளுக்கு இடையிலுள்ள இமய மலையின் ஒரு பிரிவாகும். நேங்பா கணவாய் மற்றும் ரோல்வாலிங் இமால் மற்றும் சோ ஓயு ஆகியவற்றுக்கு இடையில் கிழக்கு நோக்கி அருண் ஆறு வரைக்கும் நீண்டுள்ளது [1].

மகாலங்கூர் இமால்
மகாலங்கூர் இமால்
[महालंगूर हिमाल]
Nepal relief location map.jpg
சோமோலொன்சோ முகடு, திபெத்து
உயர்ந்த இடம்
Peakஎவரெசுட்டு முகடு
உயரம்8,848 m (29,029 ft)
Dimensions
நீளம்80 km (50 mi) ESE
அகலம்65 km (40 mi) NNE
பரப்பளவு5,200 km2 (2,000 sq mi)
புவியியல்
மகாலங்கூர் இமால் is located in நேபாளம்
மகாலங்கூர் இமால்
மகாலங்கூர் இமால்
நேப்பாளா-திபெத்திய எல்லை
Countriesநேப்பாளம் and திபெத்து
Districtsசோலுகூம்பு மாவட்டம், சங்குவாசபா மாவட்டம் and திங்கிரி வட்டம்
மலைத்தொடர்இமயம்
Borders onஉரொல்வாலிங் இமால்

எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள் நான்கு இத்துணைத் தொடரிலேயே உள்ளன. எவரெஸ்ட், லோட்சே, மக்காலு, சோ ஓயு ஆகிய மேற்படி மலைகளுடன், வேறும் பல முக்கிய மலைகள் இதில் உள்ளன. இதனால் இதை உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர் எனலாம். இதன் திபேத் பக்கத்தில், ரோங்புக் பனியாறும், காங்சங் பனியாறும் உள்ளன. நேபாளப் பக்கத்தில், கோசும்பா பனியாறு, கும்பு பனியாறு என்பவை இருக்கின்றன. எவரெஸ்ட் மலைமுகட்டில் ஏறுவதற்கான வழமையான பாதை கோசும்பாப் பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதியே இத் தொடரில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட பகுதியாகும்.

மேற்கோள்கள்தொகு

  1. H. Adams Carter (1985). "Classification of the Himalaya". American Alpine Journal (American Alpine Club) 27 (59): 116–120. http://c498469.r69.cf2.rackcdn.com/1985/109_carter_himalaya_aaj1985.pdf. பார்த்த நாள்: May 1, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாலங்கூர்_இமால்&oldid=2604450" இருந்து மீள்விக்கப்பட்டது