மகிழ்ச்சி பள்ளத்தாக்கு இந்து கோயில்

மகிழ்ச்சி பள்ளத்தாக்கு இந்து கோயில் (Happy Valley Hindu Temple) ஹொங்கொங், ஹொங்கொங் தீவு பகுதியில் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு நகரில் இருக்கும் இந்து சமயத்தினருக்கான ஒரு வழிபாட்டுத் தலமாகும். ஹொங்கொங்கில் இந்து சமயத்தினருக்கான வழிபாட்டுத் தலங்கள் இரண்டே உள்ளன. அதில் ஒன்று இதுவாகும். மற்றொன்று கவுலூன் பகுதியில் சிம் சா சுயி நகரில் கவுலூன் மந்திர் இந்து கோயில் ஆகும். கோயிலின் பூசகர்களாக வடயிந்தியரே உள்ளனர். இந்த கோயிலுக்கு இந்தி, நேபாளி, தமிழர் மற்றும் சிங்களவர் என பல மொழியினரும் செல்வர்.

அமைவிடம் மற்றும் முகவரி

தொகு

இந்த கோயில் ஹொங்கொங் தீவில், மகிழ்ச்சி பள்ளத்தாக்கு (Happy Valley) எனும் நகரில் உள்ளது. ஹொங்கொங்கில் இரண்டு இந்து கோயில்கள் இருந்தாலும், இந்த கோயிலே பெரிதானதும், பிரசித்திப்பெற்றதும் ஆகும். இது மோகன் மண்டபம், மகிழ்ச்சி பள்ளத்தாக்கு இந்து கோயில், முதலாம் மாடி, வொங் நெய் சொங் வீதி, மகிழ்ச்சி பள்ளத்தாக்கு எனும் முகவரியில் உள்ளது.[1]

ஞாயிறு மற்றும் சிறப்பு நாட்களில் மக்கள் அதிகமாகக் காணப்படும். இந்த கோயிலுக்கு ஹொங்கொங்கில் வீட்டுப் பணியாளர்களாக பணிப்புரியும் சிங்களவர்களும் அதிகம் செல்வதைக் காணலாம். ஞாயிற்றுக்கிழமை பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் 2011-02-20.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு