மகூலி

மகாராட்டிராவிலுள்ள கோட்டை

மகூலி (Mahuli) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் மும்பையிலிருந்து வடகிழக்கே சுமார் 75 கிமீ தொலைவில் உள்ளது. சிவாஜியின் தந்தை சாகாஜி போஸ்லே இந்த கோட்டையை தனது வசம் வைத்திருந்தார்.

கோட்டையின் அமைவிடத்தைப் பற்றிய அறிவிப்பு

அம்சங்கள்

தொகு
 
மகூலி கோட்டையின் உச்சி
 
மகூலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வரைபடம்

கடல் மட்டத்திலிருந்து 2815 அடி உயரத்தில் அமைந்துள்ள மகூலி கோட்டை, பிரபலமான மலையேற்றப் பாதையாகும்.

தானே மாவட்டத்தின் மிக உயரமான இடமாகும். மகூலியைச் சுற்றியுள்ள காடு சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. [1]

ஒரு திறந்த சிவன் கோயிலைத் தவிர, அதன் மேல் ஒரு சிறிய வற்றாத குடிநீர் குளம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் மூன்று குகைகளும் உள்ளன. அவற்றில் பெரிய குகை சில நேரங்களில் மகாராட்டிடிராவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இயற்கையான மலைக் கோட்டைகளைப் போலவே இரவு தங்குமிடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியாக 'கல்யாண் கர்வாஜா' என்று அழைக்கப்படும் ஒரு கல் வளைவும் உள்ளது. ஆனால் வளைவின் குவிமாடம் இப்போது உடைக்கப்பட்டுள்ளது.

அசங்காவ் தொடருந்து நிலையம் மகூலிக்கு அருகிலுள்ளது.

வரலாறு

தொகு

முகலாயப் பேரரசர் (ஷாஜகான்) இராணுவத்தில் தக்காணப் படையில் சிறிது காலம் பணிபுரிந்த சாகாஜி போஸ்லே தனது மனைவி ஜிஜாபாய் மற்றும் மகன் சிவாஜியுடன் மகூலிக்கு குடிபெயர்ந்தார். கான் ஜமான் கோட்டையைத் தாக்கியபோது, சாகாஜி போர்த்துகேயர்களிடம் உதவி கேட்டார். அவர்கள் மறுத்ததால் சாகாஜி சரணடைந்தார்.

சிவாஜி 1658 ஜனவரி 8 அன்று முகலாயர்களிடமிருந்து இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். ஆனால் 1661 இல் அதை இழந்து பின்னர் அதை மீண்டும் வென்றார். 1665ஆம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின் மூலம், மராத்தியர்கள் மீண்டும் இந்தக் கோட்டைகளை இழந்தனர். 1670 பிப்ரவரியில், சிவாஜி மகூலியை கைப்பற்ற முயன்றார். ஆனால் தோல்வியடைந்தார். போரில் ஆயிரக்கணக்கான மராத்தியர்கள் கொல்லப்பட்டனர். 1817 வரை, சிவாஜியின் வம்சாவளி கோட்டையை சொந்தமாக வைத்திருந்தது. ஆனால் பின்னர் அது ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்தக் கோட்டை தான்சா வனவிலங்கு சரணாலயத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. சூழலியல் சுற்றுலாமேம்படுத்துவதற்காக, சமீபத்தில் கூட்டு வன மேலாண்மை ஆட்சிகளின் கீழ் 'மகூலி காட் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு' உருவாக்கப்பட்டது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உதவியுடன் கோட்டையை மீட்டெடுக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "List of the protected monuments of Mumbai Circle district-wise" (PDF). Archived from the original (PDF) on 6 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகூலி&oldid=4151494" இலிருந்து மீள்விக்கப்பட்டது